IND vs BAN 2nd T20: வங்கதேசத்தை திணறடித்த இந்திய பௌலர்கள்.. இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

IND vs BAN: 222 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பர்வேஸ் ஹுசைன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் பந்தில் முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் பறந்தன. இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் பர்வேஸ் ஹுசைன் எமோனை அர்ஷ்தீப் சிங் கிளீன் பவுல்டு செய்தார். 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த பர்வேஸ் ஆட்டமிழக்க, அடுத்த பேட்ஸ்மேனாக கேப்டன் நஸ்முல் சாண்டோ களமிறங்கினார்.

IND vs BAN 2nd T20: வங்கதேசத்தை திணறடித்த இந்திய பௌலர்கள்.. இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

இந்திய அணி (Image: BCCI)

Published: 

09 Oct 2024 22:30 PM

இந்தியா – வங்கதேச இடையிலான 2வது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா 25 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினர். சாம்சன் 10 ரன்களிலும், அபிஷேக் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ALSO READ: Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

இவர்களை தொடர்ந்து, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவும் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு நிதிஷ் ரெட்டியும், ரிங்கு சிங்கும் இணைந்து 48 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு கொண்டு சென்றனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்புறம், ரிங்கு சிங் தன் பங்கிற்கு 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி 8 ஓவர்களில் 99 ரன்கள்:

14வது ஓவரில் 73 ரன்கள் எடுத்திருந்த நிலைடில் நிதிஷ் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ரன்களின் வேகத்தை குறைக்கவில்லை. இங்கிருந்து மேலும், இந்திய அணியின் ஸ்கோர் வேகம் பெற்று பவுண்டரிகளும் சிக்ஸர்களும் மழை பொழிந்தன. ஹர்திக் பாண்டியா கடந்த போட்டியை போலவே அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். 19வது ஓவர் வரை இந்திய அணி 213 ரன்களை குவிந்திருந்தது. 230 ரன்களை எளிதாக இந்திய அணி கடக்கும் என்று எதிர்பார்த்தபோது, கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்கள் வீழ்ந்தன. இதன் காரணமாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

வங்கதேச அணியில் ரிஷாத் ஹுசைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

222 ரன்கள் இலக்கு:

222 ரன்கள் என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பர்வேஸ் ஹுசைன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் பந்தில் முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் பறந்தன. இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் பர்வேஸ் ஹுசைன் எமோனை அர்ஷ்தீப் சிங் கிளீன் பவுல்டு செய்தார். 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த பர்வேஸ் ஆட்டமிழக்க, அடுத்த பேட்ஸ்மேனாக கேப்டன் நஸ்முல் சாண்டோ களமிறங்கினார்.

ALSO READ: Skipping Breakfast: காலை உணவை ஒரு மாதம் தவிர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? இங்கே தெரிஞ்சுகோங்க!

தொடர்ந்து, 5வது ஓவரில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வங்கதேசத்தின் இரண்டாவது விக்கெட் சரிந்தது. 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் நஸ்முல் ஹுசைன் சாண்டோவை வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றினார். தொடர்ந்து, ஆறாவது ஓவரில் வங்கதேச அணி 42 ரன்கள் எடுத்திருந்தபோது மூன்றாவது விக்கெட் இழந்தது. சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே லிட்டன் தாஸை அவுட் செய்ய, தௌஹீத் ஹர்டோயை அபிஷேக் சர்மா அவுட் செய்தார்.

தொடர்ந்து, வங்கதேச அணி தடுமாற 11 ஓவர் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தடுத்து, ஜகர் அலி மற்றும் ரிகாத் ஹூசைன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் மஹ்முதுல்லாஹ் ஒற்றை ஆளாக போராடி வங்கதேச அணியின் ஸ்கோர் போர்டை உயர்த்தி கொண்டு இருந்தார். 15 பந்துகளில் 102 ரன்கள் தேவை என்ற நிலையில், தூக்கி அடிக்க பார்த்த தன்சிம் ஹசன் சாகிப் 8 ரன்களில் நிதிஷ் ரெட்டி பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 19.1 வது ஓவரில் 41 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!