IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

Team India Squad For Bangladesh 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருதலைப்பட்ச வெற்றியை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை.

IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

இந்திய அணி (Image: BCCI)

Updated On: 

16 Oct 2024 12:43 PM

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருதலைப்பட்ச வெற்றியை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

ALSO READ: IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

மாற்றம் இல்லாத இந்திய அணி:

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணியில் இடம்பிடித்த 16 வீரர்களும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஏற்கனவே நம்பர்-1 இடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்று, வங்கதேச அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி க்ளீன் ஸ்வீப் செய்தால் புள்ளி பட்டியலில் இந்திய அணி வலுவான இடத்தை பிடிக்கும்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய அணி 68.52 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் இருந்தது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி வெற்றி சதவீதத்தை 71.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில், 2 தோல்விகளை சந்தித்து ஒரு போட்டியை இந்திய அணி டிரா செய்தது.

கான்பூர் டெஸ்ட்:

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் கான்பூர் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் கூடுதலாக குல்தீப் யாதவ் அல்லது அக்சாட் படேலை களமிறக்கலாம். சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மர்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி, தொடக்க வீரராக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் சுப்மன் கில்லுடன் விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான் ஆகியோர் உள்ளனர். முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டும், இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவு ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அதேசமயம் வேகப்பந்து வீச்சு பிரிவில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் உள்ளனர்.

ALSO READ: Chess Olympiad 2024: ஒரே நாளில் மூன்று தங்கம்.. செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை அள்ளிய இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்

வங்கதேசம்:

நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹ்தி ஹசன் மிராஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?