5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ind vs Ban, 2nd Test: 52 ஓவர்களை மட்டுமே கையில் எடுத்த ரோஹித் படை.. வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!

Indian Cricket Team: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி 3 ஓவர்களில் 51 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் எடுத்த உலக சாதனையை படைத்தது. மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

Ind vs Ban, 2nd Test: 52 ஓவர்களை மட்டுமே கையில் எடுத்த ரோஹித் படை.. வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!
இந்திய கிரிக்கெட் அணி (Image: Twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 16 Oct 2024 12:41 PM

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 285/9 டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 146 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக, 95 ரன்கள் இலக்கை இந்தியா எளிதாக துரத்தி வெற்றிபெற்றது.

ALSO READ: Viral Video: மனசிலாயோ பாடலுக்கு மாஸ் நடனம்.. குடும்பத்துடன் கலக்கிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!

போட்டியில் என்ன நடந்தது..?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச அணியை பேட்டிங் செய்ய வருமாறு அழைத்தார்.

முதல் நாளில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்த, வங்கதேச அணி 100 ரன்களை கடந்திருந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 35 ஓவர்கள் விளையாடி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. முதல் நாள் அப்படியே மழை காரணமாக ரத்து செய்யப்பட, இரண்டாவது நாள் மழை காரணமாகவும், மூன்றாவது நாள் பிட்ச் ஈரப்பதம் காரணமாகவும் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. நான்காவது நாளான நேற்று வங்கதேசம் மீண்டும் 107 ரன்களுடன் போட்டியை தொடங்கியது.

நான்காம் நாளில் வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸை இந்தியா 233 ரன்களுக்கு சுருட்டியது. வங்கதேசத்தில் அதிகபட்சமாக மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிரடியான முதல் இன்னிங்ஸ்:

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி 3 ஓவர்களில் 51 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் எடுத்த உலக சாதனையை படைத்தது. மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இதனை தொடர்ந்து, இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல்.ராகுல் 68 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் எடுத்திருந்தனர். வங்கதேச அணியில் ஹகில் அல் ஹசன் – மெஹ்னி தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்:

மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணியை, இந்திய அணி 47 ஓவர்களில் 146 ரன்களுக்குள் சுருட்டியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக இரண்டாவது இன்னிங்ஸில் சத்மான் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

இதையடுத்து, 62 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பேட்டிங் செய்து 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களும், கில் 6 ரன்களுடன் வெளியேற, விராட் கோலி 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

ALSO READ: IPL Retention Rule Explainer: ஐபிஎல் 2025ல் எத்தனை வீரர்கள் தக்க வைக்கலாம்..? என்னென்ன புதிய விதிகள் அறிமுகம்..? முழு விவரம் இங்கே!

1 ரன் தேவை என்ற நிலையில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து, சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 18வது டெஸ்ட் தொடரை வெல்ல உதவி செய்தார். மேலும், ஓவர்கள் அடிப்படையில் இந்தியா பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் இந்தியா 52 ஓவர்கள் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றது.

Latest News