5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN Test: இந்தியா – வங்கதேச போட்டிக்கு வந்த மிரட்டல்.. கான்பூரில் இருந்து இடம் மாற்றமா..?

Kanpur Test Threat: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. கான்பூர் ஸ்டேடியத்தில் வங்கதேச அணி விளையாடினால், இந்து மகாசபை போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கான்பூரில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியானது வேறு இடத்தில் மாற்றுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

IND vs BAN Test: இந்தியா – வங்கதேச போட்டிக்கு வந்த மிரட்டல்.. கான்பூரில் இருந்து இடம் மாற்றமா..?
இந்தியா – வங்கதேசம் (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2024 11:52 AM

கான்பூர் டெஸ்ட்: இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 டெஸ்ட் போட்டி தொடர் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 2வது போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கடைசியாக கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பிறகு ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, இலங்கை தொடருக்கு பிறகு டெஸ்ட் வடிவத்தில் 6 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி களமிறங்கியுள்ளது. மறுபுறம், சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று மிகப்பெரிய சாதனை படைத்தது. இதன் காரணமாக, இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும்.

ALSO READ: Shane Warne Birthday: விக்டோரியா மண்ணின் மைந்தன் டூ ஸ்பின் மன்னன்.. ஷேன் வார்னே கிரிக்கெட்டை ஆண்ட கதை!

இந்து மகாசபை மிரட்டல்:

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. கான்பூர் ஸ்டேடியத்தில் வங்கதேச அணி விளையாடினால், இந்து மகாசபை போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கான்பூரில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியானது வேறு இடத்தில் மாற்றுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரி ஒருவர் இடம் மாற்றப்படாது, இந்த டெஸ்ட் போட்டி கான்பூரில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி தெரிவிக்கையில், “ ஆம், மிரட்டல் வந்தது உண்மைதான். டெஸ்ட் போட்டியின் நிலைமையை கண்காணித்து வருகிறோம். பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் வங்கதேச அணி மற்றும் பார்வையாளர்களை வரவேற்க தயாராக உள்ளோம். இந்த டெஸ்ட் போட்டி கான்பூரில் மட்டுமே நடைபெறும், வேறு எங்கும் நடைபெறாது. கான்பூர் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: Virat Kohli: 147 ஆண்டுகளில் முதல்முறை.. மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் விராட் கோலி!

இந்தியா – வங்கதேச இடையிலான தொடர்:

  • முதல் டெஸ்ட் – சென்னை- 19 செப்டம்பர் முதல் 23 செப்டம்பர் வரை
  • 2வது டெஸ்ட் – கான்பூர் – 27 செப்டம்பர் முதல் அக்டோபர் 1 வரை
  • முதல் டி20 போட்டி – குவாலியர் – 6 அக்டோபர்
  • 2வது டி20 போட்டி – டெல்லி – 9 அக்டோபர்
  • 3வது டி20 போட்டி – ஹைதராபாத் – 12 அக்டோபர்

டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் விவரம்:

இந்தியா அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

வங்கதேச அணி:

நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, தஸ்கின் மஹ்மூத், தாஸ்கின் மஹ்மூத், , சையத் காலித் அகமது, ஜெகர் அலி அனிக்.

Latest News