5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்தியாவின் பிளேயிங் லெவனில் இவர்களுக்கு வாய்ப்பா?

IND Vs BAN Test: நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி, சமீபத்தில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எந்த பிளேயிங் லெவனை களமிறக்க போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கான பதில் நாளை டாஸ் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். ஆனால், பல வீரர்கள் முதல் முறையாக வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பை தருமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. 

IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்தியாவின் பிளேயிங் லெவனில் இவர்களுக்கு வாய்ப்பா?
இந்திய அணி (Image: Gareth Copley/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 18 Sep 2024 22:11 PM

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (செப்டம்பர் 19) தொடங்குகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளும் கடந்த ஒரு வார பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 ​​பிரச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் வடிவத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

அதே நேரத்தில், நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி, சமீபத்தில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எந்த பிளேயிங் லெவனை களமிறக்க போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கான பதில் நாளை டாஸ் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். ஆனால், பல வீரர்கள் முதல் முறையாக வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்பை தருமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

ALSO READ: IND vs BAN 1st test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்..?

இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்..?

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மொத்தம் 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில், மூன்று ஆடுகளங்கள் மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு மண்ணால் ஆனவை. இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிவப்பு களிமண் ஆடுகளத்தில் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இந்த பிட்ச்சில் நடத்தப்பட்டால் இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

அதன்படி, 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களை ரோஹித் சர்மா களமிறக்கலாம். தொடர்ந்து, ஒரு விக்கெட் கீப்பர் உள்பட 6 வீரர்கள் பேட்ஸ்மேன்களாக உள்ளே இருப்பார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ரிஷப் பண்ட்க்கு முக்கியத்துவம் தரலாம். துருவ் ஜூரலா? ரிஷப் பண்ட்டா? என்ற கேள்வி எழும்போது இந்திய அணியில் பண்ட்டை தவிர்க்க முடியாது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான துருவ் ஜூரல் பெஞ்சில் அமர வைக்கப்படலாம்.

பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கும்..?

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இளம் இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் தொடக்க வீரராக இன்னிங்ஸை தொடங்கலாம். தொடர்ந்து, சுப்மன் கில் மூன்றாவது இடத்தில், இவருக்கு பிறகு விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களாக களமிறங்க வாய்ப்புள்ளது.

பந்துவீச்சில் யாருக்கு முக்கியத்துவம்..?

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சொந்த மைதானம். அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளில் இங்கு விளையாடியுள்ளார். எனவே, இருவருக்கும் இந்த மைதானம் எப்படி செயல்படும் என்பது நன்றாகவே தெரியும். இதன் காரணமாக ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் இல்லாமல் பிளேயிங் லெவனை பற்றி யோசிக்க மாட்டார். அதே நேரத்தில், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் என்று வரும்போது அக்சர் படேலை விட குல்தீப் யாதவை இந்திய அணி முழுதாக நம்பும். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் முகமது சிராஜை பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

ALSO READ: India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

கணிக்கப்பட்ட வங்கதேச அணி:

ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மெஹந்தி ஹசன் மெராஜ், தைஜுல் இஸ்லாம், நஹித் ரானா மற்றும் ஹசன் மஹ்மூத்/தஸ்கீன் அஹ்மத்.

Latest News