IND vs BAN: தோனியை விட அதிக ரன்கள்.. இந்திய அணிக்கு அச்சுறுத்தல் தரப்போகும் முஷ்பிகுர் ரஹீம்!
Mushfiqur Rahim: முஷ்பிகுர் ரஹீம் 2010ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டியில் 15 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் உள்பட 604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவரது சிறந்த ஸ்கோர் 127 ரன்கள் ஆகும். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் என்ற பெருமையையும் ரஹீம் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் களமிறங்கியுள்ளது. சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதன் காரணமாக இந்தியா – வங்கதேசம் இடையிலான் தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் வங்கதேசத்தை சேர்ந்த சில வீரர்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இதில், முக்கியமான வீரர்களில் வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம்.
முஷ்பிகுர் ரஹீம்:
வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியை விட அதிக ரன்களை அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 191 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு வெற்றியை தேடி தந்தார். தனது 18 வருட டெஸ்ட் வாழ்க்கையில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள முஷ்பிகுர் ரஹீம், எம்.எஸ். தோனியை விட ரன்கள், சராசரி மற்றும் சதங்கள் அடிப்படையில் முன்னிலையில் உள்ளார். எம்.எஸ். தோனி இதுவரை தந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 144 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 38.09 சராசரியில் 6 சதங்களுடன் 4876 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்பிகுர் ரஹீம் தனது 18 வருட டெஸ்ட் வாழ்க்கையில் 166 இன்னிங்ஸ்களில் 39.01 சராசரியில் 11 சதங்களுடன் 5892 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஆதிக்கம்:
முஷ்பிகுர் ரஹீம் 2010ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டியில் 15 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் உள்பட 604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவரது சிறந்த ஸ்கோர் 127 ரன்கள் ஆகும். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் என்ற பெருமையையும் ரஹீம் படைத்துள்ளார்.
வங்கதேச அணிக்காக அதிக ரன்கள்:
37 வயதான ரஹீம் 2005ல் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதன்பிறகு விஸ்வரூம் எடுத்த முஷ்பிகுர் ரஹீம் வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக குவித்தவர் ஆனார். இதுவரை 5,892 ரன்கள் குவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிம் இக்பால் , 70 டெஸ்டில் 134 இன்னிங்ஸ்களில் 5,134 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து, 11 சதங்களுடன், வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த ரஹீம் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மொமினுல் ஹக் 12 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
வங்கதேச அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையையும் முஷ்பிகுர் ரஹீம் வைத்துள்ளார். இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக விளையாடியுள்ளார். இந்த பட்டியலில் தமீம் இக்பால் 70 டெஸ்ட் போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஷகிப் அல் ஹசன் 69 டெஸ்ட் போட்டிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி:
நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷத்மான் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி அனிக், தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், ஹசன் மஹ்மூத், தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், நஹித் ராணா, காலித் அகமது