India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

Ravichandran Ashwin: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு எதிரான முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் அனைவரின் பார்வையும் சொந்த மண்ணில் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதுதான் இருக்கும். சேப்பாக்கின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அஷ்வினின் சுழலும் கேரம் பந்தும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று 38 வயதை எட்டியிருக்கும் அஸ்வின், பல்வேறு சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

ரவிச்சந்திரன் அஸ்வின் (Image: Stu Forster/Getty Images)

Published: 

17 Sep 2024 13:28 PM

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என இரு அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா – வங்கதேச அணிகளுக்கு எதிரான முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் அனைவரின் பார்வையும் சொந்த மண்ணில் மைந்தன் ரவிச்சந்திரன் அஸ்வின் மீதுதான் இருக்கும். சேப்பாக்கின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அஷ்வினின் சுழலும் கேரம் பந்தும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று 38 வயதை எட்டியிருக்கும் அஸ்வின், பல்வேறு சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

ALSO READ: Happy Birthday Ashwin: காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.. கிரிக்கெட்டில் மாயாஜால மன்னன் ஆன கதை!

ஜாகீர் கான் சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்..?

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை ஜாகீர் கான், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது வரை 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 9 விக்கெட்களை வீழ்த்தினால், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் ஜாகீர் கானை முந்தி முதலிடத்திற்கு செல்வார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்கள்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் தற்போது படைத்துள்ளார். இதுவரை நாதன் லயன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது நாதன் லயனிடம் முந்த 14 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.

2023-25 உலக சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்கள்:

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை 51 விக்கெட்களை வீழ்த்தி 2023- 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின் 41 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஹேசில்வுட்டை முந்துவதற்கு அஸ்வினுக்கு தற்போது 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.

அனில் கும்ப்ளேவை முந்த வாய்ப்பு:

இந்திய மண்ணில் அஸ்வின் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 455 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 22 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தியாவில் 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார். அஸ்வின் இதுவரை தனது டெஸ்ட் வாழ்க்கையில் 516 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இன்னும் 4 பேரை அஸ்வின் ஆட்டமிழக்க செய்தால், 519 விக்கெட்டுகளை வீழ்த்திய கர்ட்னி வால்ஷின் சாதனையை முறியடிப்பார். மேலும், பதினொரு விக்கெட்களை வீழ்த்தினால், நாதன் லயனின் 530 விக்கெட்கள் சாதனையையும் முறியடிப்பார்.

ALSO READ: IND vs BAN: “இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்”- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

வார்னே சாதனை முறியடிக்க வாய்ப்பு:

டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 36 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.வங்கதேசத்துக்கு எதிராக மேலும் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டியில் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னின் சாதனையை முறியடிப்பார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார். இலங்கையின் முத்தையா முரளிதரன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – வங்கதேச டெஸ்ட் அட்டவணை:

  1. முதல் டெஸ்ட் – 19-23 செப்டம்பர் (சென்னை – எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்)
  2. இரண்டாவது டெஸ்ட் – 27 செப்டம்பர் முதல் அக்டோபர் 1 வரை (கான்பூர் – கிரீன் பார்க் ஸ்டேடியம்)
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?