IND vs BAN T20 Squad: புதுமுகமாக உள்ளே வந்த மயங்க் யாதவ்.. வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு..!
IND vs BAN: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், சர்ப்ரைஸ் எண்ட்ரியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்து கலக்கிய மயங்க் யாதவ் உள்ளே வந்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான டி20 தொடர் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி குவாலியரில் நடக்கிறது. இந்தநிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்டியா அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், சர்ப்ரைஸ் எண்ட்ரியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்து கலக்கிய மயங்க் யாதவ் உள்ளே வந்துள்ளார். மேலும் இஷான் கிஷன் இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.
பண்ட்-க்கு ஓய்வு:
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ய் தொடர்களில் விளையாட உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் பண்ட்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், அடுத்து வரும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு பும்ரா, சுப்மன் கில் போன்ற அனுபவ வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பும்ரா, கில், பண்ட் ஆகியோர் அக்டோபர் 16ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கலாம். உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான், நடராஜன், கலீல் அகமது மற்றும் முகமது ஷமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மயங்க் யாதவுக்கு வாய்ப்பு:
இந்திய அணியில் முதல் முறையாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கி மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார். காயம் காரணமாக ஐபிஎல் 2024ல் பாதியோடு மயங்க் யாதவ் வெளியேறினாலும், தற்போது முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
NEWS 🚨 – #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
More details here – https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
— BCCI (@BCCI) September 28, 2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார். வருண் சக்கரவர்த்தி கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.
இந்தியா – வங்கதேசம் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. அதேசமயம், தொடரின் கடைசி போட்டி அக்டோபர் 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. (மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும்)
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ், (கேப்டன்) அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.