5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN Test: இன்னும் 2 வெற்றி போதும்! டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கபோகும் இந்தியா..!

India vs Bangladesh: வங்கதேச அணி, இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகளில் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs BAN Test: இன்னும் 2 வெற்றி போதும்! டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைக்கபோகும் இந்தியா..!
இந்திய அணி (Image: twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 14 Sep 2024 15:12 PM

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. சமீபத்தில் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கிளீன் ஸ்வீப் செய்து வரலாறு படைத்தது. இதன் காரணமாக, வங்கதேச அணியின் நம்பிக்கை மிக அதிகமாக இருக்கும்.

ALSO READ: Robin Singh Birthday: இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய வெளிநாட்டவர்.. யார் இந்த ராபின் சிங்..?

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

வங்கதேச அணி, இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகளில் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய வரலாறு படைக்கப்போகும் இந்திய அணி:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவை பின் தள்ளி அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும். இந்தியா இதுவரை 579 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் வங்கதேசத்தை வீழ்த்தினால் 180 வெற்றிகள் கிடைக்கும். இது நடந்தால் இதுவரை 179 டெஸ்ட் போட்டிகளில் வென்று 4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி, 4வது இடத்திற்கு முன்னேறும். இந்த பட்டியலில் 397 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட் வரலாற்றில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள்:

ஆஸ்திரேலிய அணி 866 போட்டிகளில் விளையாடி  414 வெற்றி, 236 தோல்விகளுடன் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து அணி  1077 போட்டிகளில் விளையாடி 397 வெற்றி, 325 தோல்விகளுடனும் 355 போட்டிகள் டிரா செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 580 போட்டிகளில் 183 வெற்றி, 214 தோல்வி மற்றும் 182 போட்டிகள் டிராவில் செய்த நிலையில், ஒரு டையை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 466 ஆட்டங்களில் 179 போட்டிகளில் வெற்றி, 161 போட்டிகளில் தோல்விகளுடன் 126 போட்டிகளை டிரா செய்து 4வது இடத்தில் உள்ளது.  இதே வரிசையில் இந்திய அணி இதுவரை 579 போட்டிகளில் விளையாடி 178 போட்டிகளில் வெற்றி, 178 தோல்வி சந்தித்துள்ள நிலையில் 222 போட்டிகள் டிரா மற்றும் ஒரு போட்டியும் டையுடன் 5வது இடத்தில் இருக்கிறது.

ALSO READ: Surya Kumar Yadav Birthday: 31 வயதில் அறிமுகம்.. டி20யில் புயல் வேகம்.. சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம்!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே அதிக ரன்கள்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 136.66 சராசரியுடன் 820 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஆவார். இவர் இந்திய அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 43 சராசரியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 604 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் அடுத்தபடியாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வங்கதேசத்திற்கு எதிராக ஏழு டெஸ்ட் போட்டிகளில் 70 சராசரியுடன் 560 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்திலும், வங்கதேசத்திற்கு எதிரான ஐந்து டெஸ்ட்களில் 78 சராசரியுடன் 468 ரன்கள் எடுத்து புஜாரா நான்காவது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இரட்டை சதம் உட்பட இரண்டு சதங்களை அடித்து 437 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

Latest News