IND vs BAN: இந்தியா – வங்கதேச டெஸ்டில் குவிந்த பல சாதனைகள்.. இதுபோன்ற ரெக்கார்டை படைத்த முதல் அணி! - Tamil News | ind vs ban test: Records broken during 2nd Test as India beats Bangladesh | TV9 Tamil

IND vs BAN: இந்தியா – வங்கதேச டெஸ்டில் குவிந்த பல சாதனைகள்.. இதுபோன்ற ரெக்கார்டை படைத்த முதல் அணி!

Published: 

01 Oct 2024 20:03 PM

India Records: இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழந்ததில்லை. 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று வரலாறு படைத்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி தனது கடைசி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

IND vs BAN: இந்தியா - வங்கதேச டெஸ்டில் குவிந்த பல சாதனைகள்.. இதுபோன்ற ரெக்கார்டை படைத்த முதல் அணி!

இந்திய கிரிக்கெட் அணி (Image: BCCI)

Follow Us On

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான கான்பூர் டெஸ்டில் இந்திய அனி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி நாளில் 45 ஓவர்கல் மீதமிருந்த நிலையில், இந்தியா வெற்றிபெற்று அசத்தியது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசத்தை 146 ரன்களுக்குள் சுருட்டியது. இதையடுத்து, கடைசி இன்னிங்ஸில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எட்டியது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் அதிரடி அரைசதத்தால் 18வது ஓவரில் இந்தியா வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தநிலையில், இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்டில் படைக்கப்பட்ட சாதனைகளை என்னவென்று இங்கே பார்க்கலாம்..

ALSO READ: Ind vs Ban, 2nd Test: 52 ஓவர்களை மட்டுமே கையில் எடுத்த ரோஹித் படை.. வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!

சாதனைகள்:

  • கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம், இந்திய கிரிக்கெட் அணி இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 180 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற 4வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்

  1. 414 – ஆஸ்திரேலியா
  2. 397 – இங்கிலாந்து
  3. 183 – வெஸ்ட் இண்டீஸ்
  4. 180 – இந்தியா
  5. 179 – தென்னாப்பிரிக்கா
  • இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழந்ததில்லை. 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று வரலாறு படைத்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி தனது கடைசி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
  • கான்பூர் டெஸ்டில் வெற்றி பெற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 312 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டது. இதன்மூலம், இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து குறைந்த பந்துகளை விளையாடி வெற்றி பெற்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
  1. 276 – ENG vs WI, பிரிட்ஜ்டவுன், 1935
  2. 281 – IND vs SA, கேப் டவுன், 2024
  3. 300 – SA vs ZIM, கேப் டவுன், 2005
  4. 312 – IND vs BAN, கான்பூர், 2024
  5. 327 – AUS vs SA, மெல்போர்ன், 1932

ALSO READ: Viral Video: மனசிலாயோ பாடலுக்கு மாஸ் நடனம்.. குடும்பத்துடன் கலக்கிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்!

  • இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய அணியின் ஸ்ட்ரைக் ரேட் 7.36 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியாலும் இந்த சாதனையை செய்ய முடியவில்லை.
  • மழையால் இரண்டு நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு நான்கு இன்னிங்ஸ்களிலும் விளையாடி வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.
  • இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். இதில், இவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு மேல் இருந்தது. இந்த சாதனையை நிகழ்த்திய கடைசி இந்திய வீரர் வீரேந்திர சேவாக் மட்டுமே ஆவார்.
  • வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரன் ரேட் 4.39 ஆகும். இந்திய அணிக்கு இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் இதுவே அதிகபட்ச ரன் ரேட் ஆகும்.

இந்தியாவில் ஒரு டெஸ்டில் அதிக ரன் விகிதம்:

  1. 4.39 – IND vs BAN, கான்பூர், 2024
  2. 4.13 – IND vs SL, சென்னை, 1982
  3. 4.12 – IND vs WI, ராஜ்கோட், 2018
  4. 4.10 – IND vs WI, மும்பை, 2013
  5. 4.01 – IND vs BAN, கொல்கத்தா, 2019
  6. 4.00 – IND vs AFG, பெங்களூரு, 2018
  • இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான தொடர் ஆட்ட நாயகன் விருது ரவிசந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை (11 முறை) தொடர் நாயகன் விருதை வென்று முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்.
  • இன்றைய நாளில் விராட் கோலி வந்தபோது, 27 ரன்களில் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளை அடித்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசி கோலி, இந்த சாதனையை படைத்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றார்.
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version