Virat Kohli: சாதனையுடன் மோசமான ரெக்கார்டையும் படைத்த கோலி.. குவியும் வாழ்த்துகளும், ஆதரவுகளும்..
IND vs BAN: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அந்த இன்னிங்ஸில் அவரால் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதே சமயம், இரண்டாவது இன்னிங்ஸில் ஜாக்கிரதையாக பேட்டிங் செய்து விராட் கோலி 5 ரன்களை தொட்டபோது, தன் பெயரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். அதன்படி, இந்திய மண்ணில் விராட் கோலி 12,000 சர்வதேச ரன்களை கடந்தார்.
இந்தியா – வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது நேற்று முதல் சென்னை எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 376 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்திருந்தனர். இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதன் காரணமாக, வங்கதேச அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது.
மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்து 308 ரன்களுடன் விளையாடி வருகிறது. இந்தநிலையில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது பெயரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்து சிறப்பு பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன், இந்தியாவில் இந்த சாதனையை படைத்த ஒருவர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
விராட் கோலியின் சாதனை:
🧑🎨🧑🎨#INDvsBANTEST #ViratKohli𓃵 #smdesign https://t.co/iKEj9Ce9S4 pic.twitter.com/1I0HCW6fZq
— Ansul yadav (@ADesignz06) September 20, 2024
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அந்த இன்னிங்ஸில் அவரால் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதே சமயம், இரண்டாவது இன்னிங்ஸில் ஜாக்கிரதையாக பேட்டிங் செய்து விராட் கோலி 5 ரன்களை தொட்டபோது, தன் பெயரில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். அதன்படி, இந்திய மண்ணில் விராட் கோலி 12,000 சர்வதேச ரன்களை கடந்தார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை படைத்த 2வது வீரர் என்ற சாதனையையும், உலகளவில் 5வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் முதலிடம்:
சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய மண்ணில் இதுவரை 14,192 ரன்கள் குவித்துள்ளார். அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், அவரது மண்ணியில் 13,117 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் ஜாக் காலிஸ் 12305 ரன்களுடனும், குமார் சங்கக்காரவும் இலங்கையில் 12043 ரன்களுடன் அவரவர் சொந்த மண்ணில் அதிக ரன்களை குவித்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் 9 முறை எல்பிடபிள்யூ:
Virat Kohli didn’t review this, the reaction of umpire Richard Kettleborough was epic as he gave Virat out wrong. #INDvBAN #ViratKohli𓃵 pic.twitter.com/PyWxxZ7kxG
— Ahmad Haseeb (@iamAhmadhaseeb) September 20, 2024
கடந்த மூன்று ஆண்டுகளில் 9வது முறையாக ஸ்பின்னருக்கு எதிராக கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகியுள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் கடந்த 2021 முதல் டெஸ்ட் போட்டிகளில் 8 முறையும், அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 8 முறையும் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ALSO READ: Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!
18 முறை அவுட்:
கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 18 முறை சுழற்பந்து வீச்சாளரக்ளால் அவுட்டாகியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் கோலி ஆசியாவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 1094 பந்துகளை சந்தித்து வெறும் 499 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, டெஸ்டில் மட்டுமல்ல, ஒருநாள் போட்டிகளிலும் பெரிதாக ரன் அடிக்கவில்லை. இவர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினார். அந்த தொடர் முழுவதும் விராட் கோலியால் 58 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி தனது கடைசி சதத்தை நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் 117 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிக்குப் பிறகு, விராட் தனது கடைசி 4 ஒருநாள் போட்டிகளில் முறையே 54, 24, 14 மற்றும் 20 ரன்கள் எடுத்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 12,000 ரன்கள் கடந்ததற்காக விராட் கோலியை சமூக வலைதளங்களில் வாழ்த்தியும், மீண்டும் பழைய பார்முக்கு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.