Virat Kohli: விராட் கோலி கணக்கில் மற்றொரு மெகா சாதனையா? பாண்டிங்கை பின்னுக்கு தள்ள மிகப்பெரிய வாய்ப்பு..!
IND vs BAN: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 591 இன்னிங்ஸில் 53.35 சராசரியில் 26,942 ரன்களை எடுத்துள்ளார். இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார். கோலி தற்போது 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் வைத்துள்ளார்.
விராட் கோலி: கிட்டத்தட்ட 40 நாட்கள் என்ற நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் அனைத்தும் களமிறங்கிய பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக நுழையுமா இல்லையா என்பதை இந்த 10 டெஸ்ட் போட்டிகள்தான் தீர்மானிக்கும். இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விராட் கோலி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார் அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
விராட் கோலி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 591 இன்னிங்ஸில் 53.35 சராசரியில் 26,942 ரன்களை எடுத்துள்ளார். இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்தில் உள்ளார். கோலி தற்போது 4வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்சமாக 34,357 ரன்கள் எடுத்துள்ளார். சச்சினை தவிர சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் 30 ஆயிரம் ரன்களை தொட்டது இல்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் குமார் சங்கக்கார 28,016 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 26,942 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி இந்த இரு ஜாம்பவான்களை முந்த விராட் கோலிக்கு 1,075 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 34,357 ரன்கள் (782 இன்னிங்ஸ்)
குமார் சங்கக்கார (ஸ்ரீலங்கா) – 28,016 ரன்கள் (666 இன்னிங்ஸ்)
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) -27,483 ரன்கள் (668 இன்னிங்ஸ்)
விராட் கோலி (இந்தியா) – 26,942 (591 இன்னிங்ஸ்)
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, அடுத்ததாக வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறார். வருகின்ற 10 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 1,075 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பட்டியலை பெறுவார்.
வங்கதேச டெஸ்ட்: விராட் கோலி புதிய சாதனை படைப்பாரா?
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 152 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே 9,000 டெஸ்ட் ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 12,402 ரன்களும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 9,685 ரன்களும் எடுத்துள்ளனர்.
விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் அதிகபட்ச 15,921 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்:
- சச்சின் டெண்டுல்கர் – 15,921 ரன்கள்
- ராகுல் டிராவிட் – 13,288 ரன்கள்
- சுனில் கவாஸ்கர் – 10,122 ரன்கள்
- விராட் கோலி – 8,848 ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த ஆக்டிவ் பேட்ஸ்மேன்:
- ஜோ ரூட் (இங்கிலாந்து) – 12,402 ரன்கள்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) – 9,685 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) – 8,848 ரன்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 8,743 ரன்கள்
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் முகமது சிராஜ்.