5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.. இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு..?

டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2 வது அரையிறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் அரையிறுதியில் வெல்லும் அணி வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக இன்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG:  இந்தியா மற்றும் இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.. இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு..?
இந்தியா , இங்கிலாந்து
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 27 Jun 2024 11:35 AM

டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் நிலையில், இதில் லீக் போட்டிகள் முடிவுற்று சூப்பர் 8 சுற்றுகள் முடிவுற்று அரையிறுதி போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் இன்றைய 2 வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டின் இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், குரூப் பியில் இரண்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
சூப்பர் 8 பிரிவின் குரூப் 1 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நடப்பு தொடரில் இந்தியா இந்த ஸ்டேடியத்தில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இந்த போடிக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கவில்லை. இன்று இரவு மழை பொழிவு காணப்பட்டால், போட்டி கைவிடப்பட்டு சூப்பர் 8ல் சுற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

அக்யூவெதரின் அறிக்கையின்படி, வருகின்ற ஜூன் 27ம் தேதி கயானாவில் மழை பெய்ய 88 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் 250 நிமிடங்கள் வரை கூடுதலாக நேரம் ஒதுக்கப்படும். இந்த 250 நிமிடங்களில் கூட போட்டியை முடிக்கவில்லை என்றால், இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த போட்டியை நேரலையில் காண ஸ்டார் ஸ்போர்ஸ் தொலைக்காட்சியிலும், ஹார்ட்ஸ்டார் செயலியிலும் காணலாம். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று இந்திய அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை செய்யும் என்பது குறிப்படத்தக்கது.

Latest News