5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs NZ 1st Test: முடிவுக்கு வந்த 36 ஆண்டுகால வறட்சி.. இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்த நியூசிலாந்து!

IND vs NZ: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தனது 36 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. 

IND vs NZ 1st Test: முடிவுக்கு வந்த 36 ஆண்டுகால வறட்சி.. இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்த நியூசிலாந்து!
நியூசிலாந்து வெற்றி (Image: blackcaps/twitter)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 20 Oct 2024 13:03 PM

பெங்களூருவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், கடந்த 1988ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தனது 36 ஆண்டுகால வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

ALSO READ: BCCI vs PCB: இந்திய அணி வந்தா மட்டும் போதும்.. ஸ்பெஷல் சலுகையை தரும் பாகிஸ்தான்..!

இன்றைய நாளில் என்ன நடந்தது..?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று நியூசிலாந்து அணி வெற்றிபெற 107 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது, நியூசிலாந்து அணிக்கு 10 விக்கெட்களும் கையில் இருந்தது. இந்திய அணிக்காக புயலாய் வந்த பும்ரா அடுத்தடுத்து கேப்டன் லதாம் மற்றும் கான்வே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கை கொடுத்தார். இதன்பிறகு யங் உடன் இணைந்து ரச்சின் ரவீந்திரா வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். ரச்சின் ரவீந்திர மற்றும் வில் யங் இடையேயான 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றது.

போட்டியின் ஐந்தாவது நாளில் இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வேறு எந்த பந்துவீச்சாளராலும் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

ரச்சின் ரவீந்திரா சதம்:

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 46 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்ததாக, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை வகித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும், கான்வே 91 ரன்களும் எடுத்திருந்தனர்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் செய்ய ஆசையா? உங்களுக்காக வாழைப்பழ அல்வா ரெசிபி!

கெத்துக்காட்டிய இந்திய அணி:

இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 52 மற்றும் 70 ரன்கள் எடுத்தனர். அதன்பிறகு, சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நன்றாக விளையாடிய சர்பராஸ் கான் 150 ரன்களிலும், ரிஷப் பண்ட் 99 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து இந்திய அணி 462 ரன்களில் ஆல் அவுட்டானது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன், கடந்த 1969ல் நாக்பூரில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியும், கடந்த 1988ம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது வெற்றியையும் நியூசிலாந்து அணி பதிவு செய்தது. தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

Latest News