IND Vs NZ: 5 இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட்.. வெறும் 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி! - Tamil News | IND Vs NZ 1st test: india vs new zealand test indian team was all out for 46 runs | TV9 Tamil

IND Vs NZ: 5 இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட்.. வெறும் 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி!

India vs New Zealand 1st Test: இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால், இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, நீண்ட நேரம் நிலைக்காமல் ஆட்டமிழந்தனர்.

IND Vs NZ: 5 இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட்.. வெறும் 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி!

இந்தியா - நியூசிலாந்து

Published: 

17 Oct 2024 14:32 PM

நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 45 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிக குறைந்த ஸ்கோராக இது பதிவானது. இந்திய அணியின் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், ஆடுகளம் போர்வையால் மூடப்பட்டது.

ALSO READ: IPL 2025: கிளாசனுக்கு அதிக தொகை.. டிராவிஸ் ஹெட் நிலைமை..? வெளியான ஹைதராபாத் தக்கவைப்பு பட்டியல்..!

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்:

இன்று காலை மழை இல்லாத காரணத்தினால், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைந்தது. பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது நாளில், மழை நின்றதை அடுத்து ஆட்டம் தொடங்கியது. மழை நின்றுவிட்டது. இன்றைய போட்டி தொடங்கியது முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இந்திய அணி பேட்டிங் செய்தபோது முதல் 10 ஓவர்களுக்குள் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் அவுட்டாக, விராட் கோலி டக் அவுட் ஆகி நடையை கட்டினார். தொடர்ந்து, இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த சர்ப்ராஸ் கானும் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்மூலம், இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்களை இழந்தது. கடந்த 18 ஆண்டுகளில் சொந்த மண்ணில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி குறைந்த ஸ்கோராக இது பதிவானது. முன்னதாக 2006ஆம் ஆண்டு நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக, முதல் 10 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்தது, அதாவது கடந்த 23 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் மோசமான நிலையில் இருந்தது இது இரண்டாவது முறையாகும்.

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்தனர். ஆனால், இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, நீண்ட நேரம் நிலைக்காமல் ஆட்டமிழந்தனர். இருப்பினும், இருவருக்கும் இடையே 21 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. இந்திய அணியின் ஸ்கோர் 31 ஆக இருந்தபோது, ஒரு பவுண்டரி உதவியுடன் 13 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு, உள்ளே வந்த ஜெய்ஸ்வால் 6 பந்துகளை சந்தித்து, ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களான வீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து ஜஸ்பிரித் பும்ரா ஒரு ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணி 40 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இன்று இந்திய அணி தனது இரண்டாவது குறைந்த ஸ்கோரைப் பெறும் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். அப்போது, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறிது நேரம் நிலைத்து நின்றனர். இருவரும் இணைந்து 6 ரன்கள் எடுத்தநிலையில், குல்தீப் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

அசத்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்:

நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ’ரூக் 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்திருந்தனர்.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோர்:

46 – இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
62 – நியூசிலாந்து v இந்தியா, மும்பை, 2021
75 – இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987
76 – இந்தியா v தென்னாப்பிரிக்கா, அகமதாபாத், 2008
79 – தென்னாப்பிரிக்கா v இந்தியா, நாக்பூர், 2015

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகக் குறைந்த ஸ்கோர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களில் ஆல் அவுட், அடிலெய்டு, 2020
இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களில் ஆல் அவுட், லார்ட்ஸ், 1974
நியூசிலாந்துக்கு எதிராக 46 ரன்களில் ஆல் அவுட் , பெங்களூரு, 2024* (இன்று)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட், பிரிஸ்பேன், 1947
இங்கிலாந்துக்கு எதிராக 58 ரன்களில் ஆல் அவுட், மான்செஸ்டர், 1952

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?