Rishabh Pant: 90களில் அதிக முறை அவுட்.. சச்சின், டிராவிட் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட்! - Tamil News | ind vs nz 1st test indian wicket keeper rishabh pant got out 7th times in 90s | TV9 Tamil

Rishabh Pant: 90களில் அதிக முறை அவுட்.. சச்சின், டிராவிட் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட்!

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 1 ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்திருந்தால், அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 7வது சதமாக அமைந்திருக்கும். இதன்மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்திருப்பார்.

Rishabh Pant: 90களில் அதிக முறை அவுட்.. சச்சின், டிராவிட் பட்டியலில் இணைந்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட் (Image: PTI)

Published: 

19 Oct 2024 20:30 PM

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி கொண்டிருந்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், 1 ரன்னில் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் தனது 7வது சதத்தை தவறவிட்டார். அத்துடன், பண்ட் 90களில் அவுட்டாவது 7வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 105 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 99 ரன்கள் எடுத்து வில்லியம் ஓ ரூர்க் பந்தில் க்ளீன் போல்டானார்.

ALSO READ: Watch Video: ரிஷப் பண்ட் இங்க பாருங்க.. பிட்சுக்கு நடுவே தாவி தாவி குதித்த சர்பராஸ்!

சாதனையை தவறவிட்ட ரிஷப் பண்ட்:

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 1 ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்திருந்தால், அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 7வது சதமாக அமைந்திருக்கும். இதன்மூலம், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்திருப்பார். தற்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பண்ட் தங்கலது டெஸ்ட் வாழ்க்கையில் தலா 6 சதங்களை அடித்துள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்:

  • ரிஷப் பண்ட்- 6 சதங்கள்
  • மகேந்திர சிங் தோனி – 6 சதங்கள்
  • விருத்திமான் சஹா – 3 சதங்கள்
  • ஃபரூக் இன்ஜினியர் – 2 சதங்கள்
  • சையத் கிர்மானி – 2 சதங்கள்

டெஸ்ட் போட்டிகளில் 90 களில் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன்கள்:

சச்சின் டெண்டுல்கர்:

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10 முறை 90 முதல் 99 ரன்களுக்குள் அவுட்டாகியுள்ளார்.

ராகுல் டிராவிட்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ’தி வால்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டை அவுட்டாக பல எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறியுள்ளனர். இதுவரை 90 முதல் 99 ரன்களுக்குள் ராகுல் டிராவிட் 9 முறை அவுட்டாகியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்:

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 90 முதல் 99 ரன்களுக்குள் 5 முறை அவுட்டாகியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி:

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டிகளில் 5 முறை 90 முதல் 99 ரன்களுக்குள் அவுட்டாகியுள்ளார்.

90 களில் அதிக முறை அவுட்டான இந்திய பேட்ஸ்மேன்கள்:

  1. சச்சின் டெண்டுல்கர் – 10
  2. ராகுல் டிராவிட் – 09
  3. ரிஷப் பண்ட் – 07
  4. சுனில் கவாஸ்கர் – 05
  5. மகேந்திர சிங் தோனி – 05
  6. வீரேந்திர சேவாக் – 05

10வது இந்திய பேட்ஸ்மேன்:

ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்த 10வது இந்திய பேட்ஸ்மேன் ஆனார். மேலும், முன்னாள் ஜாம்பவான்களான சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்களின் தேவையற்ற பட்டியலில் தற்போது ரிஷப் பண்ட்டும் இணைந்துள்ளார். இந்திய தரப்பில் கங்குலி, தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டெஸ்டில் 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். கங்குலி டெஸ்டில் அதிகபட்சமாக இரண்டு முறை டெஸ்டில் 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

ALSO READ: Benjamin Netanyahu: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!

ரிஷப் பண்ட் இதுவரை இந்திய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் உட்பட 2542 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 871 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 1209 ரன்களும் எடுத்துள்ளார்.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?