5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs NZ: ரிஷப் பண்ட் இடத்தில் துருவ் ஜூரல் பேட்டிங்..? ஐசிசி விதி கூறுவது என்ன..?

Rishabh Pant: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இன்னிங்ஸின் 37 வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்து, ரிஷப் பண்ட்டின் முழங்காலில் நேரடியாகத் தாக்கியது. அதன்பிறகு, பண்ட் சற்று நேரம் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக, நேற்று தொடங்கி மூன்றாவது நாளான இன்று வரை விக்கெட் கீப்பிங் பொறுப்பை துருவ் ஜூரல் கவனித்து வருகிறார்.

IND vs NZ: ரிஷப் பண்ட் இடத்தில் துருவ் ஜூரல் பேட்டிங்..? ஐசிசி விதி கூறுவது என்ன..?
ரிஷப் பண்ட் – துருவ் ஜூரல் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 28 Oct 2024 12:40 PM

பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 46 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து, அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. முன்னதாக, நியூசிலாந்து அணியின் விக்கெட்கள் விழுந்தாலும் டிம் சவுதி, ரச்சின் ரவீந்திராவுடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை 370 ரன்களுக்கு கொண்டு செல்ல உதவினார். இருவரும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தனர். இந்திய மண்ணில் 8 விக்கெட்டுகள் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரச்சின் ரவீந்திராவும், சவுதியும் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும், கான்வே 91 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

ALSO READ: Rishabh Pant: அறுவை சிகிச்சை செய்த அதே கால்.. வலியுடன் வெளியேறிய ரிஷப் பண்ட்!

இன்றும் களமிறங்காத ரிஷப் பண்ட்:

இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பட் ரிஷப் பண்ட் முழங்காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். ஏற்கனவே, முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணிக்கு, இதுபோன்ற சூழ்நிலைகளில் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரிஷப் பந்தின் பேட்டிங் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று காயத்தில் இருந்து மீண்டு களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்-க்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளே வந்தார். இதனால், இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில், பண்ட் இடத்தில் பீல்டிங் செய்ய உள்ளே வந்த துருவ் ஜீரலால் பேட்டிங் செய்ய முடியுமா..? ஐசிசி விதிகள் என்ன கூறுகிறது உள்ளிட்ட கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது. அதற்கான பதில்களை இங்கே தருகிறோம்.

ALSO READ: IPL 2025: ரிஷப் பண்ட் வேண்டாம்! புதிய கேப்டனை தேடும் டெல்லி கேபிடல்ஸ்.. என்ன காரணம்..?

ஐசிசி விதிகள் கூறுவது என்ன..?

கடந்த 2018ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. அதில், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் காயம் அடைந்தால், அவருக்கு ஏற்பட்ட காயத்தை கருத்தில் கொண்டு மாற்று விக்கெட் கீப்பர் களம் இறங்க நடுவர் அனுமதிப்பார். இந்த விதியின் கீழ்தான், ரிஷப் பண்ட்-க்கு பதிலாக துருவ் ஜூரல் கடந்த 2 நாட்களாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். ஆனால், அதையே ஒரு மாற்று வீரராக உள்ளே வரும் நபர் கேப்டன் பதவியையோ அல்லது பந்துவீசவோ அனுமதிக்க ஐசிசி விதிகளில் இடம் இல்லை. விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்க வேண்டும். இதன் காரணமாக, ரிஷப் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக விளையாட தகுதியற்றவராக இருந்தால், துருவ் ஜூரல் அணிக்காக பேட்டிங் செய்ய முடியாது.

எப்படி காயம் ஆனது..?

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இன்னிங்ஸின் 37 வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்து, ரிஷப் பண்ட்டின் முழங்காலில் நேரடியாகத் தாக்கியது. அதன்பிறகு, பண்ட் சற்று நேரம் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக, நேற்று தொடங்கி மூன்றாவது நாளான இன்று வரை விக்கெட் கீப்பிங் பொறுப்பை துருவ் ஜூரல் கவனித்து வருகிறார். பண்ட்-க்கு பந்து தாக்கிய இடம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே முழங்கால் என்பது குறிப்பிடத்தக்கது. 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக, ஒரு வருடம் கழித்து பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால் தற்போது அவரது காயம் காரணமாக இந்திய அணிக்கு மீண்டும் பயத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளது.

Latest News