5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: ரிஷப் பண்ட் இங்க பாருங்க.. பிட்சுக்கு நடுவே தாவி தாவி குதித்த சர்பராஸ்!

Sarfaraz Khan: பெங்களூரு டெஸ்டின் நான்காவது நாளான இன்று சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்த போட்டியில் சர்பராஸ் கான் சதம் அடிப்பதற்கு முன்பாக சுவாரஸ்யமான விஷயம் ஒன்று மைதானத்தில் நடந்தது. இதை பார்த்த அனைவரும் வயிறு வலிக்க சிரித்தார்கள் என்றே சொல்லலாம்.

Watch Video: ரிஷப் பண்ட் இங்க பாருங்க.. பிட்சுக்கு நடுவே தாவி தாவி குதித்த சர்பராஸ்!
சர்பராஸ் கான் – ரிஷப் பண்ட்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Oct 2024 16:02 PM

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி பரபரப்பான திருப்பதை பெற்று வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரனகளுக்குள் ஆல் அவுட் ஆன நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அணி உலக கிரிக்கெட்டில் அற்புதமான மீண்டு வந்து இரண்டாவது இன்னிங்ஸில் 450 ரன்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

ALSO READ: IND vs NZ: டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறை.. தேவையில்லாத சாதனையை படைத்த அஸ்வின்..!

சர்பராஸ் கான் செய்த லீலை:

பெங்களூரு டெஸ்டின் நான்காவது நாளான இன்று சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்த போட்டியில் சர்பராஸ் கான் சதம் அடிப்பதற்கு முன்பாக சுவாரஸ்யமான விஷயம் ஒன்று மைதானத்தில் நடந்தது. இதை பார்த்த அனைவரும் வயிறு வலிக்க சிரித்தார்கள் என்றே சொல்லலாம்.

காலை முதல் சர்பராஸ் கானும், ரிஷப் பண்ட்-ம் களத்தில் இருந்தனர். அப்போது இருவரும் ஒரு ரன் ஓடிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது, சர்பராஸுக்கும், ரிஷப் பண்ட்-க்கும் இடையே தவறான புரிதல் ஏற்பட்டது. இதையடுத்து சர்பராஸ் செய்த காரியம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மைதானத்திற்கு நடுவே தாவி தாவி குதித்த சர்பராஸ் கான்:

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 56வது ஓவரின் முதல் பந்தில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியின் பந்தில் சர்பராஸ் கான் ஒரு லேட் கட் ஷாட் ஆடினார். அப்போது, சர்பராஸ் கானும், ரிஷப் பண்ட்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சி செய்தனர். ஒரு ரன் முடித்த பிறகு, இரண்டாவது ரன் எடுப்பது ஆபத்து என்று உணர்ந்த சர்பராஸ் கான் நின்றுவிட்டு, வராதே என்று ரிஷப் பண்ட்டுக்கு சைகை செய்தார். ஆனால், மறுமுனையில் ரிஷப் பண்ட் பந்தை மட்டுமே பார்த்துகொண்டே இருந்ததால், சர்பராஸ் கான் கொடுத்த சைகையை பார்க்கவில்லை. எங்கே, ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்தில், எதிரே ரன் ஸ்டிரைக்கில் இருந்த சர்பராஸ் கான் அவரை வராதே என்று தடுக்க கடுமையாக முயற்சித்தார். ஆனால், பண்ட் அப்போது அவரை பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் சர்பராஸ் கான் ஓடி வரும் ரிஷப் பண்டை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்து, பிட்சுக்கு நடுவே குரங்கு போல் தாவி தாவி குதித்து கத்தினார். அதை ரிஷப் பண்ட் மீண்டும் க்ரீஸுக்குள் தனது விக்கெட்டை காப்பாற்றி கொண்டார். சர்பராஸ் கான் செய்த விஷயம் குழந்தைகள் மற்றும் நமது சிறுவயது நினைவுகளை நினைவு படுத்தியது.

சிரித்த இந்திய வீரர்கள்:

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று சர்பராஸ் கான் செய்த இந்த செயலால், டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த இந்திய வீரர்களால் கூட சிரிப்பை அடக்கமுடியவில்லை. அஸ்வின், கம்பீர், ஜடேஜா உட்கார்ந்த இடத்தில் சிரிக்க, ரோஹித் சர்மா சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்து நின்று சிரித்தார். தற்போது , சர்பராஸ் கானின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: Benjamin Netanyahu: லெபனானில் இருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் வீட்டில் தாக்குதல்!

இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதா..?

பெங்களூரில் நடந்து வரும் இந்தியா – நியூசிலாந்து போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்குள் சுருண்டது அனைவரும் அறிந்ததே. இந்த போட்டியில் இந்திய அணி தோற்று விடுமோ என்ற பயத்தில் ரசிகர்கள் மழை பெய்ய வேண்டும் அல்லது போட்டி டிரா ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆனால், இந்த போட்டியில் சர்பராஸ் கானில் 150 ரன்களும், ரிஷப் பண்ட்டின் 99 ரன்களும் இந்திய அணியை காப்பாற்றியுள்ளது. இந்திய அணி தற்போது வரை இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 441 ரன்கள் எடுத்துள்ளது. நாளை மதியம் வரை இந்திய அணி பேட்டிங் செய்தால் வெற்றிபெற கூட வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய அணிக்கு 3 விக்கெட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இன்று விக்கெட்களை தக்கவைக்க இந்திய அணி எப்படியாவது முயற்சிக்க வேண்டும்.

Latest News