IND vs NZ 2nd Test: 300 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி.. தோல்வி பயத்தில் இந்திய அணி..! - Tamil News | IND vs NZ 2nd Test Day 2: new zealand lead by 301 runs against team india trouble at pune | TV9 Tamil

IND vs NZ 2nd Test: 300 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி.. தோல்வி பயத்தில் இந்திய அணி..!

Published: 

25 Oct 2024 19:30 PM

IND vs NZ: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 156 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் மொத்த முன்னிலை 300 ரன்களை கடந்துள்ளது.

1 / 6இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் புனேவில் முடிவடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

2 / 6

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 156 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் மொத்த முன்னிலை 300 ரன்களை கடந்துள்ளது.

3 / 6

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. புனே பிட்ச் சுழலுக்கு சாதகமாக உள்ளதால் ​​நான்காவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு மேல் இலக்கை கடப்பது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும்.

4 / 6

நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் டாம் லாதம் 133 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 86 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டெல் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

5 / 6

இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வாஷிங்டன் சுந்தர், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி இதுவரை 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

6 / 6

புனே டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கியது. நியூசிலாந்து சார்பில் சான்ட்னர் 7 விக்கெட்களும், க்ளென் பிலிம்ஸ் 2 விக்கெட்களும், டிம் சவுதி 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?