IND vs NZ: 12 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்திய அணி.. நியூசிலாந்து அபாரம்!
India vs New Zealand: பெங்களூருவை தொடர்ந்து புனேவில் நடந்த இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 359 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்கை கொடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால், 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது. பெங்களூருவை தொடர்ந்து புனேவில் நடந்த இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 359 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்கை கொடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால், 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
ALSO READ: Mayonnaise Side Effects: மயோனைஸ் லவ்வரா நீங்கள்..? இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தை தரும்..!
4,332 நாட்களுக்கு பிறகு..
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் 4,332 நாட்களுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதற்குமுன், கடந்த 2012ம் ஆண்டு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. தற்போது, அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்திய அணி தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் சொந்த மண்ணில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்வியால், சொந்த மண்ணில் தோற்கடிக்கப்படாத டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் ஓட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.
A tough loss for #TeamIndia in Pune.
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PlU9iJpGih
— BCCI (@BCCI) October 26, 2024
போட்டியில் நடந்தது என்ன..?
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி புனேவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.
அடுத்ததாக, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வெறும் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில், இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
New Zealand take an unassailable 2-0 lead as India lose their first Test series at home since 2012.#WTC25 | #INDvNZ 📝: https://t.co/Kl7qRDguyN pic.twitter.com/ASXLeqArG7
— ICC (@ICC) October 26, 2024
ஆரம்பத்தில் அதிரடியாக 4வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடர்ந்து விக்கெட்களை இழந்து 245 ரன்களுக்குல் ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் ஸ்கோர் 96 ரன்கள் இருந்தபோது, 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. அடுத்தடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ALSO READ: Daily Shaving: தினமும் ஷேவ் செய்வது நல்லதா..? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஷேவ் செய்யலாம்?
359 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் 77 ரன்கள் குவித்து அவுட்டானர். அதன்பிறகு, ரவீந்திரா ஜடேஜா சிறிது நேரம் நின்று 42 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர, கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களிலும், சுப்மன் கில் 23 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் டக் அவுட்டிலும், சர்பராஸ் கான் 9 ரன்களில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.
ஆட்டநாயகன்:
நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அபாயகரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் சான்ட்னர், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், இரண்டாவது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.