IND vs NZ 2nd Test: ரோஹித் படைக்கு 359 ரன்கள் இலக்கு.. இதுவரை இந்திய அணி செய்த மிகப்பெரிய சேஸிங் லிஸ்ட் இதோ!
IND vs NZ: டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை துரத்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய இல்லை என்றாலும், சில போட்டிகளில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்து கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை தந்துள்ளது. தற்போது, புனேவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இன்னிங்ஸில் விளையாடுவது என்பது எப்போதும் கடினமான ஒன்று. தட்டையான ஆடுகளம், பிட்சின் வேகம், விரிசல்கள், ஸ்பின் டிராக் என எதுவாக இருந்தாலும், போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது எளிதான காரியம் அல்ல. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சில மிகப்பெரிய சேசிங்கள் நடந்து, இன்றுவரை பேசப்பட்டு வருகின்றன. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி சில போட்டிகளில் அபாரமாக விளையாடி பெரிய இலக்குகளை துரத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை துரத்திய சாதனை இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய இல்லை என்றாலும், சில போட்டிகளில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்து கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை தந்துள்ளது. தற்போது, புனேவில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்து தொடரை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது. அந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சேஸிங் செய்த 3 போட்டிகளை பற்றி இங்கே பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 403 ரன்கள், போர்ட் ஆஃப் ஸ்பெயின் – (1976)
கடந்த 1976ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸ் செய்து வரலாறு படைத்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 403 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதை இந்திய அணி துரத்தி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக களமிறங்கிய குண்டப்பா விஸ்வநாத்தின் 112 ரன்களும், சுனில் கவாஸ்கரின் 102 ரன்களும் இந்திய அணி இலக்கை விரட்ட உதவி செய்தனர். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 359 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 228 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 403 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்கள், சென்னை – (2008)
இந்திய கிரிக்கெட் அணி 2008ல் இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்கள் இலக்கை விரட்டி புது சரித்திரம் படைத்தது. இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 316 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி 241 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்து இன்னிங்சை டிக்ளேர் செய்து, இந்தியாவுக்கு 387 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. 4வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் வீரேந்திர சேவாக் 68 பந்துகளில் 82 ரன்களும், சச்சின் டெண்டுல்கரின் அபாரமாக 103 ரன்களும் விளாச, இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ALSO READ: IND vs NZ 2nd Test: 300 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி.. தோல்வி பயத்தில் இந்திய அணி..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 328 ரன்கள் – 2021
காபா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியை எந்தவொரு இந்திய ரசிகர்களாலும் மறக்க முடியாது. 2021 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. அடுத்ததாக, பேட்டிங் செய்த இந்திய அணி 38 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 91 ரன்களும், ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்து விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.
புனேவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.