Virat Kohli: 26 இன்னிங்ஸ்களில் 21 முறை அவுட்.. சுழலில் விழும் விராட் கோலி விக்கெட்! - Tamil News | ind vs nz 2nd test virat kohli poor performance against spin in 21 outs in 26 innings | TV9 Tamil

Virat Kohli: 26 இன்னிங்ஸ்களில் 21 முறை அவுட்.. சுழலில் விழும் விராட் கோலி விக்கெட்!

IND vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு, சில இந்திய வீரர்கள் துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். ஆனால், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை. அதில், பங்கேற்று விளையாடி இருந்தால் இந்த டெஸ்ட் போட்டிக்கு உதவியாக இருந்திருக்கும்.

Virat Kohli: 26 இன்னிங்ஸ்களில் 21 முறை அவுட்.. சுழலில் விழும் விராட் கோலி விக்கெட்!

விராட் கோலி (Image: PTI)

Updated On: 

25 Oct 2024 17:40 PM

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மோசமான ஷாட் ஆடி அவுட்டானார். இதனால், ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றன. கடந்த சில போட்டிகளாகவே விராட் கோலியால் நீண்ட நேரம் நின்று, பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 70 ரன்கள் எடுத்திருந்த கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

ALSO READ: Happy Birthday Umesh Yadav: பாதியில் நின்ற கல்வி.. நிலக்கரி சுரங்கத்தில் வேலை.. இந்திய அணியில் உமேஷ் யாதவ் இடம் பிடித்த கதை!

ஸ்பின் பந்தில் திணறும் கோலி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிட்செல் சாண்ட்னரின் ஃபுல் டாஸ் பந்தில் தூக்கி அடிக்க பார்த்த விராட் கோலி கிளீன் பவுல்டு ஆனார். ஆசிய ஆடுகளங்களில் கோலி பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் கோலி, டெஸ்ட் போட்டிகளில் சுழலுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருகிறார். 2021 முதல் ஆசியாவில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கோலி 21 முறை அவுட் ஆகியுள்ளார். இதுவே, விராட் கோலிக்கு நீண்ட நேரம் நின்று சதம் அடிக்க முடியாத சூழலை தருகிறது. பெங்களூர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 70 ரன்கள் எடுத்து ஆடி கொண்டிருந்த விராட் கோலி, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிளென் பிலிப்ஸ் பந்தில் அவுட்டானார்.

விராட் கோலிக்கு மிகப்பெரிய தொல்லை:

டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய பிரச்சனை இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர்கள்தான். இன்றைய போட்டியிலும் கூட இடது கை சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் பந்தில்தான் அவுட்டானார். கடந்த 2021ம் ஆண்டு முதல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான டெஸ்டில் 26 இன்னிங்ஸ்களில் கோலி 21 முறை ஆட்டமிழந்துள்ளார். இதில், இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 27.10 சராசரியில் 10 முறை அவுட்டாகியுள்ளார். இதுவரை 2024 ஆம் ஆண்டில், விராட் கோலி ஒன்பது இன்னிங்ஸ்களில் 30 சராசரியில் 228 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். கடந்த மூன்று டெஸ்ட் இன்னிங்ஸில் விராட் கோலியை வெளியேற்றிய மூன்று பந்துவீச்சாளர்களில் இருவர் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

அரைசதம்:

பெங்களூருவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 70 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 47 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 29 ரன்களும் எடுத்திருந்தார். முன்னதாக, சென்னையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ALSO READ: IND vs NZ: ஸ்டேடியத்தில் தண்ணீர் பற்றாக்குறை.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மன்னிப்பு கேட்ட நிர்வாகம்!

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா கோலி..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு, இந்திய அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு, சில இந்திய வீரர்கள் துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். ஆனால், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை. அதில், பங்கேற்று விளையாடி இருந்தால் இந்த டெஸ்ட் போட்டிக்கு உதவியாக இருந்திருக்கும். தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை.

 

வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!
நீல நிற புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!