IND vs NZ: முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்.. சுழலால் நியூசிலாந்து சுருட்டிய வாஷிங்டன் சுந்தர்!
Washington Sundar: வாஷிங்டன் சுந்தர் வீழ்த்திய இந்த 7 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் கிளீன் பவுல்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கேப்டன் டாம் லாதம், வில் யங், டெவோன் கான்வே ஆகியோரை பெவிலியன் அனுப்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் எதிரணி அணியின் 10 பேட்ஸ்மேன்களையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இது ஆறாவது முறையாகும்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஒன்றல்ல இரண்டல்ல 7 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்போது, வாஷிங்டன் சுந்தர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை செய்ய முடியாத ஒரு சாதனையையும் நிகழ்த்தினார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்கு பிறகு, வாஷிங்டன் சுந்தரை 2வது டெஸ்ட் போட்டிக்கு அழைத்து வந்தனர். இந்திய அணிக்காக 3 ஆண்டுகளுக்கு பிறகு வாஷிங்டன் சுந்தரை டெஸ்ட் அணியில் சேர்த்தனர்.
ALSO READ: KL Rahul Dropped: கம்பீர் கொடுத்த ஆதரவு எங்கே..? 12 மணிநேரத்தில் நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்!
கலக்கிய வாஷிங்டன் சுந்தர்:
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியது. கே.எல்.ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் களமிறங்கினர்.
SIXTH WICKET FOR SUNDAR…!!!!
– Washi is unstoppable today in Pune, he has destroyed Kiwi batting. 💪 pic.twitter.com/3JGfsbj7SH
— Johns. (@CricCrazyJohns) October 24, 2024
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 7 பேட்ஸ்மேன்களை அவுட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். இதையடுத்து, வாஷிங்யன் சுந்தர் ஒரு டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேட்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து பேட்ஸ்மேனான ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு பிறகு, டாம் டாம் ப்ளண்டெல், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், டிம் சவுத்தி, அஜாஸ் படேல் மற்றும் மிட்செல் சான்ட்னரையும் அவுட் செய்தார்.
வாஷிங்டன் சுந்தர் வீழ்த்திய இந்த 7 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் கிளீன் பவுல்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கேப்டன் டாம் லாதம், வில் யங், டெவோன் கான்வே ஆகியோரை பெவிலியன் அனுப்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் எதிரணி அணியின் 10 பேட்ஸ்மேன்களையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இது ஆறாவது முறையாகும். இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, தர்மசாலாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு முன், வாஷிங்டன் சுந்தர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திருந்தார்.
4வது பந்துவீச்சாளர்:
இந்திய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அய்ஜிக விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் படைத்தார். இதற்கு முன், வெங்கடராகவன் டெல்லி ஸ்டேடியத்தில் 72 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த பட்டியலில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஈஏஎஸ் பிரசன்னா இரண்டாவது இடத்திலும், கடந்த 2017ம் ஆண்டு 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீத்திய அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் மொத்தம் 5 டெஸ்ட், 22 ஒருநாள் மற்றும் 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் 265 ரன்களுடன் 13 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 315 ரன்களுடன் 23 விக்கெட்டுகளும், 52 டி20 போட்டிகளில் 361 ரன்களுடன் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த சிறப்பான செயல்திறன் மூலம் இந்திய அணியின் தனக்கான இடத்தை வாஷிங்டன் சுந்தர் உறுதி செய்துவிட்டார்.
முதல்நாளில் என்ன நடந்தது..?
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்த நிலையில், முதல் நாளை முடித்து கொண்டது.