IND vs NZ: இந்திய அணியை ஆட்டிப்படைக்கும் 4 வருட பயம்.. WTC இறுதிப்போட்டிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

IND vs NZ 3rd test: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தோல்விகளுக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு வருவதற்கு இந்திய அணியின் பாதை கடினமாக உள்ளது. இந்தியாவிற்கு போட்டியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் களத்தில் உள்ளன.

IND vs NZ: இந்திய அணியை ஆட்டிப்படைக்கும் 4 வருட பயம்.. WTC இறுதிப்போட்டிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

கவுதம் கம்பீர் - ரோஹித் சர்மா (Image: PTI)

Published: 

29 Oct 2024 07:20 AM

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி க்ளீன் ஸ்வீப் தோல்வியை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் க்ளீன் ஸ்வீப் தோல்வியை சந்திக்கும் அபாயத்தை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தால் மோசமான சாதனையை படைக்கும். முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

ALSO READ: MS Dhoni: மீண்டும் வரும் எம்.எஸ்.தோனி.. தக்கவைப்பு பட்டியல் தயார்.. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!

நியூசிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து வரலாற்று சாதனை படைத்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை. 2020ல் நியூசிலாந்தில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் தோற்று தொடரை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்பதில் நியூசிலாந்து அணி உறுதியாக உள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு..

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி எப்படியாவது வென்றாக வேண்டும். நவம்பர் 1ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்றால், 24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணியை க்ளீன் ஸ்வீப் செய்த பெருமையை நியூசிலாந்து அணி படைக்கும். கடந்த 2000ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் க்ளீன் ஸ்வீப் செய்தனர். அன்றைய தினம் தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தோல்விகளுக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு வருவதற்கு இந்திய அணியின் பாதை கடினமாக உள்ளது. இந்தியாவிற்கு போட்டியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் களத்தில் உள்ளன.

அடுத்த 6 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும், மீதமுள்ள 5 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய அணிக்கு மிக முக்கியம்.

அடுத்த 6 டெஸ்ட் போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றாலோ அல்லது 1ல் டிரா செய்தாலோ இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். அதாவது இங்கு இந்திய அணியின் சதவீதம் 71.05 புள்ளிகளை எட்டும். இதன் மூலம் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

4ல் மட்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்..?

6 போட்டிகளில் 4ல் வென்றாலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் இங்கு மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், இந்த சதவீதம் 64.04% ஆக மாறும். இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணி எதிர்பார்க்கும்.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை நியூசிலாந்து எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஏனெனில் அடுத்த 4 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சதவீதம் 64.29% ஆக இருக்கும். இதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வது கடினமாகும். அதாவது இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

ALSO READ: Rohit Sharma: 2,52,0,8 என மொத்தமே 4 இன்னிங்ஸில் 62 ரன்கள்.. டெஸ்டில் தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா..!

அதேபோல், தென்னாப்பிரிக்கா அடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறக்கூடாது. ஏனெனில் தென்னாப்பிரிக்கா அடுத்த 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் சதவீதம் 69.44% ஆக மாறும். இது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லாமல் தடுக்கும்.

எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற, இந்திய அணி அடுத்த 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் அல்லது 5 வெற்றி மற்றும் 1 டிராவை எட்ட வேண்டும். இது தவிர, 4 வெற்றி பெற்றால், டீம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி செல்ல, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முடிவுகளுக்காக காத்திருக்கும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!