IND vs NZ: ஸ்டேடியத்தில் தண்ணீர் பற்றாக்குறை.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மன்னிப்பு கேட்ட நிர்வாகம்!
Maharashtra Cricket Association: புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து டெஸ்டின் முதல் நாளில் ரசிகர்கள் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டனர். நீரிழப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து அணி 259 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்தநிலையில், போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென மைதானத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தங்கள் தவறை ஏற்றுக்கொண்டு ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
ALSO READ: IND vs NZ: முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள்.. சுழலால் நியூசிலாந்து சுருட்டிய வாஷிங்டன் சுந்தர்!
போட்டிக்கு நடுவே என்ன நடந்தது..?
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான புனேவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அமைப்பாளர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்கு கொண்டு வராததால் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர். கொளுத்தும் வெயிலில் தாகத்தினால் தவித்து கொண்டிருந்த ரசிகர்கள், குடிநீர் கிடைக்காததால், குடிநீர் கிடைக்காததால், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதற்காக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
@BCCI @BCCIdomestic No Drinking water at Stand 5 , North Stand , Gate 3 #MCA Stadium #Pune#INDvsNZ pic.twitter.com/XYw8GMYkJt
— Mohit (@meetwa007) October 24, 2024
குவிந்த 18,000 ரசிகர்கள்:
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று போட்டியை காண 18000 ரசிகர்கள் மைதானத்திற்கு வந்தனர். ரசிகர்கள் அமரும் பெரும்பாலான இடங்கள் மேற்கூரை இல்லாமல் உள்ளது. இதனால் வெயிலில் அமர்ந்திருந்த ரசிகர்கள் முதல் அமர்வு முடிந்து தண்ணீர் பாட்டில் வாங்க சென்றனர். ஆனால், மைதானத்திற்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் இல்லாததால் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, தண்ணீரை ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப தொடங்கினர். இதற்கிடையில் பாதுகாப்பு படையினர் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட கூடாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தனர்.
Shame on MCA for poor water management in IND vs NZ #MCA pune pic.twitter.com/8ysRoOL7WK
— Pratik Patil (@Patilp6969) October 24, 2024
மைதானம் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்ததாலும், காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், தண்ணீர் லாரி தாமதமாக மைதானத்திற்கு வந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
20 பேர் மருத்துவமனையில் அனுமதி:
புனேவில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து டெஸ்டின் முதல் நாளில் ரசிகர்கள் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டனர். நீரிழப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இது எங்கள் தவறு, ஆனால் இப்போது டெஸ்டின் இரண்டாவது நாளில் தண்ணீருக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்” என தெரிவித்துள்ளது.
ALSO READ: Watch Video: என்னை நம்புங்கள்! இட்ஸ் அவுட்.. ரோஹித் சர்மாவிடம் வாதிட்ட சர்பராஸ் கான்..!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்சிஏ செயலாளர் கமலேஷ் பிசல், ” இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தண்ணீரால் ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். தற்போதைய தண்ணீர் பிரச்னையை தீர்த்துவிட்டோம் என்று நினைக்கிறோம். மதிய உணவு இடைவேளையின் போது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், சில கடைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தண்ணீர் கொள்கலன்களை நிரப்ப 15 முதல் 20 நிமிடங்கள் தேவை. இதனால் குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக பாட்டில் தண்ணீரை வழங்க முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்தார்.