IND vs AUS: இந்தியாவில் அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி எது..? முழு பட்டியல் இதோ!
Team India: ஆஸ்திரேலிய உள்ளிட்ட மூன்று அணிகள் மட்டுமே மூன்று முறைக்கு மேல் இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றுள்ளன. மற்ற மூன்று அணிகளும் தலா ஒருமுறை மட்டுமே தொடரை வென்றுள்ளன.ந்தவகையில், இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி எது என்று பார்ப்போம்.
இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி 6 அணிகள் மட்டுமே டெஸ்ட் தொடரை வென்றுள்ளன. இந்த 6 அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி 17 முறை தொடரை இழந்துள்ளது. இதில், ஆஸ்திரேலிய உள்ளிட்ட மூன்று அணிகள் மட்டுமே மூன்று முறைக்கு மேல் இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றுள்ளன. மற்ற மூன்று அணிகளும் தலா ஒருமுறை மட்டுமே தொடரை வென்றுள்ளன. அந்தவகையில், இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி எது..? இதுவரை எத்தனை முறை வென்றுள்ளது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்ப்போம்..
வெஸ்ட் இண்டீஸ்:
இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி எவ்வளவு பலம் மிக்க அணி என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் டெஸ்ட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாயகரமான அணியாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 1948, 1958, 1966, 1974 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் இந்திய மண்ணில் டெஸ்ய் தொடர்களை வென்றது.
இங்கிலாந்து:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிறகு இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, அதாவது கடந்த 1933ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து. அதன்பிறகு, கடந்த 1974, 1979, 1984 மற்றும் 2012ல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றது.
ஆஸ்திரேலியா:
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிக்கு அடுத்தபடியாக சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்திய பெருமையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. கடந்த 1956, 1959, 1969 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியை வீழ்த்தில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி.
தலா ஒரு டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற அணிகளின் பட்டியலில் பாகிஸ்தான் (1986) முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா (2000) இரண்டாவது இடத்திலும் உள்ளது. தற்போது நியூசிலாந்து (2024) பட்டியலில் இணைந்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் படைத்துள்ளன. இந்த அணிகள் இந்திய மண்ணில் தலா 5 முறை தொடரை வென்றுள்ளன.
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத நாடுகள்:
- இலங்கை
- வங்கதேசம்
- அயர்லாந்து
- ஆப்கானிஸ்தான்
- ஜிம்பாப்வே
இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்கிறது..?
தற்போது இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. நவம்பர் 22ம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது.
ALSO READ: Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் உள்ள WACA கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதன்பிறகு, டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கும்.
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரவீந்திர ஜடேஜா ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசாத் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள்:
முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.