IND vs NZ 3rd Test: 3வது டெஸ்டின் முதல் நாள் ஓவர்.. தடுமாறும் இந்தியா.. ரோஹித், கோலி மீண்டும் ஏமாற்றம்! - Tamil News | Ind vs NZ Highlights 3rd Test Day 1: indian cricket team move to 86/4 in the 1st innings and trail by 149 runs | TV9 Tamil

IND vs NZ 3rd Test: 3வது டெஸ்டின் முதல் நாள் ஓவர்.. தடுமாறும் இந்தியா.. ரோஹித், கோலி மீண்டும் ஏமாற்றம்!

Published: 

01 Nov 2024 19:28 PM

Ind vs NZ Highlights, 3rd Test Day 1: முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, ரோஹித் சர்மா 18, விராட் கோலி 4, முகமது சிராஜ் டக் அவுட் என அடுத்தடுத்து அவுட்டாகினர்.

1 / 6இந்தியா

இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களும் எடுத்திருந்தனர்.

2 / 6

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக, நியூசிலாந்து அணி 235 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

3 / 6

அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, ரோஹித் சர்மா 18, விராட் கோலி 4, முகமது சிராஜ் டக் அவுட் என அடுத்தடுத்து அவுட்டாகினர்.

4 / 6

இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு, அடுத்த 6 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து அதிர்ச்சியளித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோரை அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் அஜாஸ் பட்டேல் அவுட்டாக, கோலி ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

5 / 6

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

6 / 6

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டேவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் படேல், வில்லியம் ஓ ரூர்க்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் இன்று
நடிகை ஹன்சிகா மோத்வானியின் நியூ ஆல்பம்
புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப் - என்ன தெரியுமா?
ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காய் பால்..!