WTC Final: WTC புள்ளிகள் பட்டியலில் பறிபோன முதலிடம்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து!

India vs New Zealand: இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, இரண்டாவது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WTC Final: WTC புள்ளிகள் பட்டியலில் பறிபோன முதலிடம்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து!

இந்திய அணி (Image: PTI)

Published: 

03 Nov 2024 19:33 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இழந்து 2வது இடத்திற்கு சென்றது. தற்போது ஆஸ்திரேலிய அணி 65.50 என்ற வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தை எட்டியது. அதேநேரத்தில், இந்திய அனி 58.33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி 55.56 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து அணி 54.55 சதவீதத்துடன் 4 வது இடத்தை எட்டியுள்ளது. அதன்பிறகு, சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா அணி 54.17 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ALSO READ: India A vs Australia A: பந்தை சேதப்படுத்தியதாக புகார்! ஆஸ்திரேலிய தொடரில் கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது?

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு இது கடைசி தொடராகும். இதில், இந்திய அணி குறைந்த பட்சம் 4 டெஸ்டில் வெற்றிபெற்று, 1 டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டும். இதில், இந்திய அணி ஒன்றில் தோற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகிவிடும். ஒருவேளை இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால், மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பி இருக்க வேண்டும். கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

ஆனால், தற்போது இந்திய அணி வீரர்களின் பார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எதிர்பார்த்ததுபோல் செயல்படவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். இந்திய அணிக்கு அடுத்ததாக இறுதிப் போட்டிக்கு செல்லும் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் உள்ளது. இதில், இரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டிகளில் முடிவை பொறுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இல்லையா என்பது தெரிய வரும்.

24 ஆண்டுகளுக்கு பிறகு..

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, இரண்டாவது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 92 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்ததில்லை.

ஆனால் இம்முறை இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து புதிய சரித்திரம் படைத்தது. முன்னதாக 1958ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என இழந்தது, ஆனால் அது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். மேலும், அந்த தொடரில் இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

இந்திய மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என இழப்பது இதுவே முதல் முறையாகும். குறைந்தபட்சம் ஒரு போட்டியையாவது இந்திய அணி வென்றோ அல்லது டிராவோ செய்துவிடும். இது மட்டுமின்றி, 24 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணி ஒரு அணியிடம் ஒயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல் முறை. கடைசியாக இந்திய அணி கடந்த 2000ம் ஆண்டு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தோற்றது. இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியுற்று, கிளீன் ஸ்வீப் செய்யப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?