5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND Vs NZ: இந்திய அணியை முடித்துவிட்ட நியூசிலாந்து.. சொந்த மண்ணில் க்ளீன் ஸ்வீப் ஆன ரோஹித் படை!

India vs New Zealand: டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. இந்தநிலையில், தற்போது 3வது போட்டியிலும் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை க்ளீன் ஸ்வீப் செய்தது. 

IND Vs NZ: இந்திய அணியை முடித்துவிட்ட நியூசிலாந்து.. சொந்த மண்ணில் க்ளீன் ஸ்வீப் ஆன ரோஹித் படை!
நியூசிலாந்து அணி (Image: Blackcaps)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 03 Nov 2024 13:49 PM

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. ஏற்கனவே, டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. இந்தநிலையில், தற்போது 3வது போட்டியிலும் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை க்ளீன் ஸ்வீப் செய்தது.

ALSO READ: Uric Acid Control: உடலில் பல பிரச்சனை தரும் யூரிக் அமிலம்.. இதை எப்படி கட்டுப்படுத்தலாம்…?

91 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை:

இந்திய மண்ணில் இந்தியாவை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற நியூசிலாந்து அணி படைத்தது. கடந்த 1933-34ல் முறை முறையாக சொந்த மண்ணில் ஒரு தொடரை விளையாடியது. இது இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். இதில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இப்போது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 3-0 என கணக்கில் தோற்கடித்த அணி என்ற பெருமையை டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து பெற்றது.

1933ம் ஆண்டு பிறகு அதாவது கிடத்தட்ட 91 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மோசமான சாதனையாக அமைந்தது.

போட்டியில் நடந்தது என்ன..?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்தும் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி டெரில் மிட்செலின் 82 ரன்கள் உதவியுடன் 235 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இதையடுத்து, அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை. ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும், ரோஹித் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, சுப்மன் கில் (90), ரிஷப் பண்ட் (60) ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 174 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.


இரண்டாவது இன்னிங்சில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வழக்கம்போல் மோசமான தொடக்கத்தை பெற்றது. ரோகித் சர்மா (11), சுப்மன் கில் (1), விராட் கோலி (1), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5), சர்பராஸ் கான் (1) என 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் தனித்து போராடி 48 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த அரை சதத்தின் மூலம் இந்திய அணி 100 ரன்களை கடக்க உதவி செய்த ரிஷப் பண்ட், 57 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, இந்திய அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது.

ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

அதன்பிறகு வந்த அஷ்வின் 8 ரன்களில் வெளியேற, ஆகாஷ் தீப் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இறுதியில் இந்திய அணி 121 ரன்களுக்குள் ஆட்டமிழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Latest News