IND vs NZ: பும்ரா ஏன் மூன்றாவது டெஸ்டில் இல்லை? அதிர்ச்சி தகவல் கொடுத்த பிசிசிஐ! - Tamil News | ind vs nz: jasprit bumrah out of ind vs nz 3rd test mumbai rohit sharma informs he is not well | TV9 Tamil

IND vs NZ: பும்ரா ஏன் மூன்றாவது டெஸ்டில் இல்லை? அதிர்ச்சி தகவல் கொடுத்த பிசிசிஐ!

Jasprit Bumrah: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டிராபி வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்கவிருப்பதால், பும்ராவின் உடற்தகுதி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. முன்னதாக, ரோஹித் சர்மா பெங்களூரு டெஸ்டுக்கு பிறகு, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க விரும்பினார். ஆனால், முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, புனே டெஸ்டில் அவர் களமிறங்கிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

IND vs NZ: பும்ரா ஏன் மூன்றாவது டெஸ்டில் இல்லை? அதிர்ச்சி தகவல் கொடுத்த பிசிசிஐ!

பும்ரா (Image: PTI)

Published: 

01 Nov 2024 11:15 AM

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை இழந்துள்ளது. இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா அணியில் இடம் பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பும்ரா விளையாடும் பதினொன்றில் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்விகளும் எழுந்தது.

ALSO READ: IPL Retention 2025: 3 கேப்டன்கள் உட்பட 6 நட்சத்திர வீரர்கள்.. வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பும்ரா ஏன் விளையாடவில்லை..?

டாஸுக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததற்கான காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா, “ நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. வான்கடே பிட்ச் நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட் செய்வோம் என்று நம்புகிறோம். பும்ராவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. இதையடுத்து, பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடும் பதினொன்றில் இடம் பெற்றுள்ளார்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பிசிசிஐயும் பும்ராவின் உடல்நிலை குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், பும்ரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் மூன்றாவது டெஸ்டில் விளையாடவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, தற்போது கடைசி போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முயற்சிக்கும். பும்ராவுக்கு பதிலாக உள்ளே வந்த முகமது சிராஜ் சில காலமாக ஃபார்மில் இல்லை. அதேபோல், நடப்பு தொடரில் பும்ரா 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதேசமயம், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா எந்த விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை. இரண்டு போட்டிகளிலும் இந்தியா அணி தோல்வியை சந்திக்க இதுவும் ஒரு பெரிய காரணம். இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இந்திய அணி பின்னடைவை சந்திக்கும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் டிராபி வருகின்ற நவம்பர் 22ம் தேதி தொடங்கவிருப்பதால், பும்ராவின் உடற்தகுதி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. முன்னதாக, ரோஹித் சர்மா பெங்களூரு டெஸ்டுக்கு பிறகு, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க விரும்பினார். ஆனால், முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, புனே டெஸ்டில் அவர் களமிறங்கிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த அக்டோபர் 30ம் தேதி மாலை பும்ரா தனது வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இப்போது, ஜஸ்பிரித் பும்ரா வருகின்ற நவம்பர் 10ம் தேதி பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் இணைவார். இந்த நாளில்தான் ஒட்டுமொத்த இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: CSK Retention List IPL 2025: ரச்சின், கான்வே அவுட்.. முக்கிய வீரர்களை வெளியேற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 மாற்றங்களை செய்துள்ளது. கடந்த போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மிட்செல் சாண்ட்னருக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக இஷ் சோதி களமிறங்கியுள்ளார். அதேபோல், டிம் சவுதிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மாட் ஹென்றி ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் ஆடும் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

நியூசிலாந்தின் ஆடும் லெவன்:

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளண்டல் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் படேல், வில் ஓ ரூர்க்.

ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் தேங்காய் பால்..!
வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பயோ டேட்டா.. சினிமா லைஃப்!
நடிகை ஸ்ருதி ஹாசனின் நியூ ஆல்பம்..!