IND vs NZ: சர்ச்சையான சிராஜ் பேட்டிங் ஆர்டர்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்றால் என்ன..?
Night Watchman: நைட் வாட்ஸ்மேன்கள் தங்களது பேட்டிங் மூலம் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்றாலும், தனது விக்கெட்டை கொண்டு அன்றைய நாள் ஆட்டத்தை முழுமையாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மூன்று அமர்வுகளுக்கு பிறகு சோர்வாக இருக்கும் வீரர்கள் அடுத்தநாள் புத்துணர்ச்சியுடன் பேட்டிங்கை தொடங்குவார்கள்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை 235 ரன்களுக்குள் சுருட்டினர். இந்திய அணியின் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். பந்துவீச்சாளர்களுக்கு பிறகு, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களிடமிருந்தும் சிறப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரு மற்றும் புனேவில் நடந்த அதே நிலைதான் மும்பையில் நடந்தது. வழக்கம்போல், ரோஹித் விரைவில் அவுட்டாக, கோலி ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்தது.
3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, அடுத்த 6 ரன்களுக்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களுடன் வெளியேறியது.
ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அஜாஸ் படேல் பந்தில் க்ளீன் போல்டானார். இதையடுத்து, விக்கெட்டுகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணி நைட்வாட்ஸ்மேனாக முகமது சிராஜை அனுப்பினார். சிராஜ் வந்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி விமர்சனத்தை கிளப்பினார். இருப்பினும், நியூசிலாந்தின் மிகப்பெரிய கொண்டாட்டம் என்னவென்றால் மிட் ஆனில் மாட் ஹென்றியின் த்ரோ விராட் கோலியை அவுட் செய்தது. இதனால், கோலி 4 ரன்களில் அவுட்டானார்.
இந்தநிலையில், நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜை ஏன் அனுப்பினார்கள்.. ஏன் ரவிசந்திரன் அஸ்வினை அனுப்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்தவகையில், நைட் வாட்ச்மேன் என்றால் என்ன, டெஸ்ட் போட்டியில் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
நைட் வாட்ச்மேன்:
டெஸ்ட் கிரிக்கெட் அதன் சிக்கலான விதிகளுக்கும், தந்திரங்களுக்காகவும் அறியப்படுகிறது. இதன் காரணமாகவே கிரிக்கெட் உலகம் முழுவதும் ஆற்றல்மிக்க ஒரு விளையாட்டாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டு பரிணாம வளர்ச்சியடைந்து பிரபலமடைந்தது.
கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன் என்பவர் பந்துவீச்சாளராக இருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். அதாவது, பேட்டிங் ஆர்டருக்கு முன்பு, முன் வரிசை பேட்ஸ்மேனாக உள்ளே வருவார். இதற்கு பின்னால் உள்ள காரணம் ஸ்டம்புகளின் இறுதிவரை எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல், அவரது அணியின் விக்கெட்டுகளை வீழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Bro came as night watchman
Wasted review
Went back to pavilionAura of Sir Mohammed Siraj 😭🔥#INDvNZ #CricketTwitter pic.twitter.com/TMiUZ7WLLN
— Riseup Pant (@riseup_pant17) November 1, 2024
ஒரு நாள் முடிவும் நேரத்தில் முன் வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதற்கு ஒரு நாள் முடிவதற்கு குறைந்த ஓவர்கள் இருக்கும்போது பந்துவீச்சாளர் ஒருவர் நைட் வாட்ஸ்மேனாக களமிறங்குவார். இதனால், அடுத்த நாளில் புதிதாக தொடங்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிப்பார்கள்.
நைட் வாட்ஸ்மேன்கள் தங்களது பேட்டிங் மூலம் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்றாலும், தனது விக்கெட்டை கொண்டு அன்றைய நாள் ஆட்டத்தை முழுமையாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், மூன்று அமர்வுகளுக்கு பிறகு சோர்வாக இருக்கும் வீரர்கள் அடுத்தநாள் புத்துணர்ச்சியுடன் பேட்டிங்கை தொடங்குவார்கள்.
மேலும், விக்கெட்டுகளை வீழ்வதை தடுக்கவும், முடிந்தவரை பல பந்துகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் நைட் வாட்ச்மேன், கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அறிவுரை கீழ் களமிறங்குவார். முந்தைய நாள் விக்கெட்டை பாதுகாத்த பிறகு நைட் வாட்ச்மேன், பொதுவாக அடுத்த நாளில் நீண்ட நேரம் நீடிக்க மாட்டார். ஆனால், நைட் வாட்ச்மேன் தந்திரம் நேற்று சிராஜ் அனுப்பப்பட்டது போல் பலனளிக்காமல் போகலாம். சிராஜ் நேற்று ஆட்டம் முடிவதற்குள் வந்தவுடன் அவுட்டாகி நடையைக்கட்டினார். இதனால், கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தந்திரம் தோல்வியடைந்தது.
ALSO READ: IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!
நைட் வாட்ச்மேனின் பெஸ்ட் நாக்:
கடந்த 2006ம் ஆண்டு சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அப்போதைய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரும், தற்போதைய பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளருமான ஜேசன் கில்லெஸ்பி ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தார். இது தற்போது வரை நைட் வாட்ச்மேனின் ஒருவரின் சிறந்த ஸ்கோராக உள்ளது.
அன்றைய ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை மட்டும் தேடி தராமல், கில்லெஸ்பிக்கு டெஸ்டில் இரட்டை சதம் அடித்தவர் என்ற சிறப்பையும் பெற்று தந்தது.