5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs NZ: 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. தோற்றால் இறுதிப் போட்டியில் இடம் பெறாதா?

WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 62.80 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைக்க, நியூசிலாந்து அணி எதிராக தற்போது மும்பையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படியாவது வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.

IND vs NZ: 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. தோற்றால் இறுதிப் போட்டியில் இடம் பெறாதா?
விராட் கோலி – ரோஹித் சர்மா (Image: PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 03 Nov 2024 11:33 AM

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றைய சூழலில் 150 ரன்கள் எடுப்பது என்பது கடினமான காரியம். எனவே, இந்திய அணிக்கு இது கடும் சவாலாக இருந்து வருகிறது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இன்னும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால், இந்திய அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் வெற்றி சதவீத புள்ளிகளை இழந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பந்தயத்தில் இருந்து வெளியேற வேண்டியதுதான். கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு முறை நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஒரு முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

ALSO READ: Rishabh Pant: நியூசிலாந்து எதிராக ஒரே அரைசதம்! பல சாதனைகளை குவித்த ரிஷப் பண்ட்..

கடந்த 2000ம் ஆண்டு இதே வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 163 ரன்கள் துரத்தி வெற்றி பெற்றது.

வான்கடே ஸ்டேடியத்தில் அதிகபட்ச ரன் சேஸ்கள்:

  • தென்னாப்பிரிக்கா 164/6 vs இந்தியா (2000)
  • இங்கிலாந்து 98/0 vs இந்தியா (1980)
  • இங்கிலாந்து 58/0 vs இந்தியா (2012)
  • இந்தியா 51/2 vs இங்கிலாந்து (1984)
  • ஆஸ்திரேலியா 47/0 vs இந்தியா (2001)

அதன்படி, மும்பை ஸ்டேடியத்தில் இதுவரை தென்னாப்பிரிக்காவை தவிர வேறு எந்த அணியும் நான்காவது இன்னிங்ஸ் 150 பிளஸ் ரன் என்ற இலக்கை சேஸ் செய்யவில்லை.

இந்தியா இன்னும் டாப் 1:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 62.80 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைக்க, நியூசிலாந்து அணி எதிராக தற்போது மும்பையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எப்படியாவது வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த டெஸ்ட் தொடரை வருகின்ற நவம்பர் 22ம் தேதி முதல் அவர்களது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி,  50 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இது தவிர, வங்கதேச அணி 27.50 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

தடுமாறும் இந்திய அணி:<

/h3>
பார்க்க எளிதாக இருந்தாலும் 147 ரன்களை விரட்ட இந்திய அணி பயங்கரமாக தடுமாறி வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்பார்த்தப்படி சிறப்பாக ஆடவில்லை. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் குவித்த சுப்மன் கில் 1 ரன்களுடனும், விராட் கோலியும் 1 ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து, உள்ளே வந்த சர்பராஸ் கானும் 1 ரன்களில் ஏமாற்றம் அளிக்க இந்திய அணி 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது, ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணியின் வெற்றிக்காக களத்தில் போராடி வருகின்றனர்.

Latest News