IND vs SA 3rd T20I: ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள்.. அதிக 200+ ஸ்கோர்.. இந்திய அணி குவித்த ரெக்கார்ட்ஸ்!

India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மொத்தம் 16 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள், நேற்றைய மூன்றாவது டி20 போட்டியில் மட்டும் 13 சிக்ஸர்களை அடித்தனர். இந்த சிக்ஸர்கள் மூலம் 2024ம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய உலக சாதனையை இந்திய அணி படைத்தது.

IND vs SA 3rd T20I: ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள்.. அதிக 200+ ஸ்கோர்.. இந்திய அணி குவித்த ரெக்கார்ட்ஸ்!

திலக் வர்மா - அர்ஷ்தீப் சிங் (Image: BCCI)

Published: 

14 Nov 2024 11:02 AM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அடுத்தாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கல் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ALSO READ: Border-Gavaskar Trophy: நெருங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபி.. பல சாதனைகளை குவிக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்!

அதிக 200 ப்ளஸ் ரன்கள்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 219 ரன்கள் குவித்ததன்மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. மேலும், கத்துக்குட்டி நாடான ஜப்பானின் உலக சாதனையையும் இந்திய அணி முறியடித்தது. அதாவது, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலாண்டர் ஆண்டில் அதிக 200 ப்ளஸ் ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற உலக சாதனையை ஜப்பான் அணி படைத்திருந்தது. நடப்பு 2024ம் ஆண்டில் ஜப்பான் அணி மொத்தமாக 7 முறை 200 ப்ளஸ் ஸ்கோர்களை அடித்திருந்தது.

தற்போது, இந்திய அணி 2024ம் ஆண்டில் 8 முறை 200 ப்ளஸ் ஸ்கோரை பதிவு செய்தது. இதன்மூலம், ஒரே காலண்டர் ஆண்டில் 200 ப்ளஸ் அடித்த அணிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தது.

அதிக சிக்ஸர்கள்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மொத்தம் 16 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள், நேற்றைய மூன்றாவது டி20 போட்டியில் மட்டும் 13 சிக்ஸர்களை அடித்தனர். இந்த சிக்ஸர்கள் மூலம் 2024ம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய உலக சாதனையை இந்திய அணி படைத்தது.

முன்னதாக இந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பெயரில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில், 21 டி20 போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 201 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். தற்போது இந்த சாதனையை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடித்துள்ளனர்.

2024ல் இந்திய அணி இதுவரை 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த முறை அவர் மொத்தம் 214 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தவிர வேறு எந்த அணியும் 200 ப்ளஸ் சிக்சர்களை அடிக்கவில்லை. 200 ப்ளஸ் சிக்சர்களை அடித்து உலக சாதனை படைத்துள்ள இந்திய அணி, 2024ம் ஆண்டு இறுதி வரை இந்த உலக சாதனையை தக்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அர்ஷ்தீப் சிங்:

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தினார். 2022 ஆம் ஆண்டு சர்வதேச டி20 அரங்கில் அறிமுகமான அர்ஷ்தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற பந்து வீச்சாளர்களை இரண்டே ஆண்டுகளில் தோற்கடித்து உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதாவது, சர்வதேச டி20 போட்டிகலில் இந்திய சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார்.

ALSO READ: India Vs Pakistan: இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் ரியான் ரிக்கிள்டனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டில் தனது 90 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து பும்ராவை முந்தினார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக 96 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் யுஸ்வேந்திர சாஹல். மோசமான பார்ம் காரணமாக அவரால் அணியில் இடம்பெற முடியவில்லை. விரைவில் சாஹலில் சாதனையையும் அர்ஷ்தீப் சிங் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

96 – யுஸ்வேந்திர சாஹல் (79 இன்னிங்ஸ்)
92 – அர்ஷ்தீப் சிங் (59 இன்னிங்ஸ்)
90 – புவனேஷ்வர் குமார் (86 இன்னிங்ஸ்)
89 – ஜஸ்பிரித் பும்ரா (69 இன்னிங்ஸ்)
88 – ஹர்திக் பாண்டியா (94 இன்னிங்ஸ்)

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் 15ம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்ல முயற்சிக்கும்.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்