Virat Kohli Retirement: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் கிங் கோலி..!
IND vs SA: ரோகித் சர்மா தலையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை 17 வருடங்களுக்கு வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில், 76 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்ற விராட்கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆட்டநாயகன் விருதைபெற்ற விராட்கோலி இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்துள்ள நிலையில், கோலியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஹராரேயில் ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக்கு இடையிலான டி20 போட்டியில் ஜூன் 12, 2010 அறிமுகமான விராட் கோலி ஆரம்பம் முதலே இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அந்த போட்டியில், 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த விராட் கோலி டி20 போட்டிகளில் இதுவரை 125 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 124 சிக்ஸர்கள், 369 பவுண்டரிகள் என 4,188 ரன்கள் எடுத்துள்ளார். 38 அரைசதம் மற்றும் 1 சதத்தை நிறைவு செய்துள்ளார். 35 வயதான விராட் கோலி, டி20 உலக கோப்பையை வென்று அந்த போட்டியில் அதிகபட்ச ரன்களான 76 ரன்களை அடித்து ஆட்ட நாயகன் விருதைபெற்றார். அப்போது இந்த முக்கியமான தருணத்தில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Also Read: டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மா படைத்துள்ள சாதனைகள்..!
ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். பின்னர், மேலும் பேசிய அவர் இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலகளாவிய போட்டியில் சாதனை படைத்துள்ளோம் என்று கூறினார்.
உலகக் கோப்பையை ஏந்த வேண்டுமென விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கோலி தெரிவித்தார்.
Also Read: Rahul Dravid: ராகுல் டிராவிட்டை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் – ரசிகர்கள் வேண்டுகோள்
நடப்பு டி20 உலக கோப்பை இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இந்த தொடரில் 1, 4, 0, 24, 37, 0, 9 என்ற சொற்ப ரன்களை பெற்று வருகிறார். டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்துள்ள வீரர், உலக கோப்பை தொடரின் மொத்த இன்னிங்ஸில் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பேட்டிங் செய்து வரும் விராட் கோலி இத்தொடரில் ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி, கடுமையான சூழ்நிலையில், நேற்றைய போட்டியில் அணியின் வெற்றிக்கு உதவினார்.