IND Vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா..! - Tamil News | IND Vs ZIM: India won the T20 series against Zimbabwe..! | TV9 Tamil

IND Vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா..!

Published: 

15 Jul 2024 08:04 AM

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று கில் தலைமையிலான இந்திய இளைஞர்கள் அணி சாதனைப்படைத்துள்ளது.

IND Vs ZIM: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா..!
Follow Us On

ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனைப்படைத்துள்ளது. நேற்று 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் முதல் ஓவரின் 4-வது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

Also Read: Elon Musk | என்னை 2 முறை கொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றது.. எலான் மக்ஸ் பகீர் தகவல்!

கேப்டன் ஷுப்மன் கில் 14 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த நிலையில், நகாரவா பந்துவீச்சில் கேப்டன் ராஸாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்களை எடுத்த நிலையில், ரிங்கு சிங் 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Also Read: Donald Trump Shot: டிரம்பை சுட்டது யார்? அமெரிக்காவை பதறவைத்த மர்ம நபர்!

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெஸ்லி மாதவரே மற்றும் பிரையன் பென்னட் ஆகிய இருவரும் டக் அவுட் ஆகினர். அடுத்து வந்த பிரையன் பென்னட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மருமணி 27 ரன்களும், பராஸ் அக்ரம் 27 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ராஸா 8, கேம்ப்பெல் 4, மதாண்டே 1, பிரண்டன் மவுட்டா 4, பிளெஸ்ஸிங் முசாராபானி 1 ரன்கள் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 125 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷிவம் துபேவும், தொடர்நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.

 

நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
Exit mobile version