5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: மறுக்கப்பட்ட ரன் அவுட்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்.. இந்திய போட்டியில் நடந்தது என்ன?

IND W vs NZ W: 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் இன்னிங்ஸின்போது 14வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது ரன்னை எடுக்க அமெலியா முயன்றபோது ரன் அவுட் ஆனார். இதை தொடர்ந்து, அமெலியா கெர் பெவிலியன் நோக்கி செல்ல தொடங்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கொண்டாட தொடங்கினர்.

Watch Video: மறுக்கப்பட்ட ரன் அவுட்.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்.. இந்திய போட்டியில் நடந்தது என்ன?
ஹர்மன்ப்ரீத் கவுர் (Image: Alex Davidson-ICC/ICC via Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Oct 2024 14:05 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் டெட் பால் குறித்த விஷயங்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டி அக்டோபர் 4ம் தேதியான நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முழுவதும் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நடுவர் மீது கோபமாக இருந்த சம்பவமும் காணப்பட்டது. அந்தவகையில், இன்று போட்டியில் நடந்த முழு விஷயம் என்ன? உண்மையில் என்ன நடந்தது ? அமெலியா கெர் ரன் அவுட் ஆகியும் நடுவர் ஏன் அவுட் என அறிவிக்கவில்லை உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Washington Sundar Birthday Special: காது கேளாமை.. சிறுவயதில் வாட்டிய வறுமை.. ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் வாஷிங்டன் சுந்தரின் பயணம்..!

என்ன நடந்தது..?

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் இன்னிங்ஸின்போது 14வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது ரன்னை எடுக்க அமெலியா முயன்றபோது ரன் அவுட் ஆனார். இதை தொடர்ந்து, அமெலியா கெர் பெவிலியன் நோக்கி செல்ல தொடங்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கொண்டாட தொடங்கினர்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த கொண்டாட்டம் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. அதாவது, கள நடுவர்கள் இந்த ரன் அவுட்டை நிராகரித்து டெத் பால் என அறிவித்தனர். இதனால், அமெலியா கெர் ரன் அவுட்டில் இருந்து தப்பினார்.

ஏன் டெத் பால்..?

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 14வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா வீசினார். அப்போது, பேட்டிங் செய்து கொண்டிருந்த நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர் 14வது ஓவரின் கடைசி பந்தில் தீப்தி ஷர்மாவின் லெங்த் டெலிவரியை லாங்-ஆஃப் நோக்கி பஞ்ச் செய்து ரன் எடுத்தார். ஹர்மன்பிரீத் பந்தை எல்லைக்கு அருகில் வசதியாகப் பிடித்து மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்தார். இதன்போது நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் இரண்டாவது ரன்னுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, பந்தை கையில் வைத்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை நோக்கி வீச, ரிச்சா கோஷ் அமெலியா கெரை ரன் அவுட் செய்தார். மூன்றாவது நடுவரால் அமெலியா கெர் நிறுத்தப்பட்டு நாட் அவுட் என அறிவிக்கப்பட்டார். இதில் சர்ச்சை எழுந்தது.

ALSO READ: India vs New Zealand: சொதப்பிய பேட்டிங்.. உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி!

அமெலியா கெர் ஒரு ரன் எடுத்தபோது, ஓவர் முடிந்து விட்டதாக கள நடுவர் அறிவித்தார். அப்போது ஓவரை முடித்த தீப்தி சர்மா நடுவரிடம் இருந்து தனது தொப்பியை பெற்று கொண்டார். இதன் அடிப்படையில் ஓவர் முடிந்ததாக அர்த்தம். கள நடுவர் ஓவர் முடிந்து விட்டது என அறிவித்த பிறகு ரன் ஓடினாலும், ரன் அவுட் செய்தாலும் அது கணக்கில் வராது. எனவே, ஓடிய இரண்டாவது ரன்னும் கணக்கில் கொள்ளப்படவில்லை, அமெலியா கெரின் ரன் அவுட்டும் ஏற்றுக்கொள்ளபடவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, மைதானத்திற்கு வெளியே பயிற்சியாளர் அமோல் மஜும்தார் மூன்றாவது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார் ஆகியோர் நடுவரின் முடிவை ஏற்று விலகி சென்றனர்.

ரன் அவுட்டில் இருந்து தப்பிய அமெலியா கெர் இரண்டு பந்துகளுக்கு பிறகு, 15வது ஓவரில் ரேணுகா சிங்கின் பந்தில் ஷாட் அடிக்க முயன்றபோது, பூஜா வஸ்ட்ராக்கரின் பந்தில் அவுட்டானார். இந்த போட்டியில் அமெலியா 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Latest News