India A vs Australia A: பந்தை சேதப்படுத்தியதாக புகார்! ஆஸ்திரேலிய தொடரில் கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது? - Tamil News | India A vs Australia A: India A accused of Ball Tampering allegations on indian a team in australia | TV9 Tamil

India A vs Australia A: பந்தை சேதப்படுத்தியதாக புகார்! ஆஸ்திரேலிய தொடரில் கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது?

Ball Tampering: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தியாக அம்பயர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதாவது, இன்றைய நாளின் தொடக்கத்தில் நடுவர் பந்தை மாற்ற முடிவு செய்தார். இந்தியா ஏ அணி வீரர்கள் கேள்வி எழுப்பியபோது, அது நடுவருடன் கடும் வாக்குவாதமாக மாறியது.

India A vs Australia A: பந்தை சேதப்படுத்தியதாக புகார்! ஆஸ்திரேலிய தொடரில் கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது?

இந்தியா ஏ (Image: ESPN)

Published: 

03 Nov 2024 17:07 PM

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான எந்தவொரு போட்டியும் பரபரப்பாகவே இருக்கும். இதையே ரசிகர்களும் அதிகம் விரும்புகின்றனர். பார்டர் – கவாஸ்கர் டிராபிக்காக இந்திய அணி இந்த மாதம் 10ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி அக்டோபர் 31ம் தேதி தொடங்கியது.

ALSO READ: IND Vs NZ: இந்திய அணியை முடித்துவிட்ட நியூசிலாந்து.. சொந்த மண்ணில் க்ளீன் ஸ்வீப் ஆன ரோஹித் படை!

பந்தை சேதப்படுத்தியதாக புகார்:

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்தியாக அம்பயர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதாவது, இன்றைய நாளின் தொடக்கத்தில் நடுவர் பந்தை மாற்ற முடிவு செய்தார். இந்தியா ஏ அணி வீரர்கள் கேள்வி எழுப்பியபோது, அது நடுவருடன் கடும் வாக்குவாதமாக மாறியது.

அதாவது ஆஸ்திரேலியா ஏ அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய ஏ அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி கள அம்பயர்கள் பந்தை மாற்ற முடிவு செய்தனர். இதுகுறித்து இந்திய வீரர்கள் நடுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கள நடுவர் ஷான் கிரெய்க் ஸ்டம்ப் மைக்ரோஃபோனில், “ நீங்கள் பந்தை சேதப்படுத்தியதால், நாங்கள் பந்தை மாற்றுகிறோம். இனி விவாதம் வேண்டாம், ஆட்டம் தொடரட்டும். இது குறித்து இனி பேச வேண்டாம்” என்று தெரிவித்தார். அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் மீண்டும் ஒருமுறை இப்போது புதிய பந்தில் விளையாட வேண்டுமா அல்லது பழைய பந்திலா என்று கேள்வி கேட்டனர். இதற்கு, கள நடுவர் பழைய பந்தில்தான் விளையாட போகிறீர்கள் என்று தெரிவித்தார்.

இதைகேட்டு ஆத்திரமடைந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், “இது முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்தார். அப்போது கள நடுவர்கள் மீண்டும், “ இது தேவையில்லாத பேச்சு, உங்கள் அணி பந்தை சேதப்படுத்தியதால்தான் நாங்கள் பந்தை மாற்றினோம்” என்று தெரிவித்தார்.

நல்லவேளையாக இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் முதல் தர கிரிக்கெட்டில் வருகிறது. இதன் காரணமாக, இது ஐசிசியால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் புள்ளிவிவரங்கள் ஐசிசி பதிவுகளில் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், நடுவருடனான வாக்குவாதத்திற்கு பிறகு இஷான் கிஷானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இஷான் கிஷன் போதிய விளக்கம் தரவில்லை எனில், அடுத்த போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.

இந்த பிரச்சனை தலைதூக்கிய நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலையிட்டு விவகாரத்தை முடித்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா, “பந்து சேதப்படுத்தப்பட்டதற்கு எந்த வீரரும் காரணமில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா ஏ வீரர்கள் பந்தை சேதப்படுத்துவது போன்ற எந்த ஒரு சம்பவமும் பதிவாகவில்லை” என்று தெரிவித்தது.

ALSO READ: IPL 2025: தக்கவைத்த பிறகு எந்த அணியிடம் எவ்வளவு தொகை..? கல்லா கட்ட போகும் ஏலம்!

தோல்வியை சந்தித்த இந்திய ஏ அணி:

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய ஏ அணி நான்காவது இன்னிங்சில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ 195 ரன்களில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய ஏ அணி சாய் சுதர்ஷனின் 103 ரன்கள் மற்றும் தேவ்தத் படிக்கல் 88 ரன்கள் உதவியுடன் 312 ரன்கள் குவித்தது.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!