5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND A vs AUS A: என்ன ஆச்சு கே.எல். ராகுல்.. ஆஸி-ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சொதப்பல்!

KL Rahul: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த கே.எல்.ராகுல், அடுத்ததாக நடந்த இரண்டு போட்டிகளிலும் இருந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டன் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

IND A vs AUS A: என்ன ஆச்சு கே.எல். ராகுல்.. ஆஸி-ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சொதப்பல்!
கே.எல்.ராகுல் (Image: PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 07 Nov 2024 10:52 AM

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய ஏ அணி, ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வியை சந்தித்தது. அதேபோல், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நான்கு நாள் ஆட்டம் நவம்பர் 7ம் தேதியான இன்று மெல்போர்னில் தொடங்கியது.

ALSO READ: WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய ஏ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்ர்க்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட்டில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல் 4 பந்துகளில் 1 பவுண்டரி ஸ்காட் போலண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மூன்றாவது இடத்தில் வந்த சாய் சுதர்சனும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதேபோல், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வந்த வேகத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 55 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்த நிலையில், மைக்கேல் நேசரின் வேகத்தில் வீழ்ந்தானர். அதன்படி 26 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிக்கலில் கே.எல்.ராகுலின் எதிர்காலம்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த கே.எல்.ராகுல், அடுத்ததாக நடந்த இரண்டு போட்டிகளிலும் இருந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டன் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தொடர் தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் தொடரில் இந்தியா ஏ அணிக்காக கே.எல்.ராகுல் விளையாட வேண்டும் என பிசிசிஐ பரிந்துரைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரோஹித் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் நிலையில் முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி புதிய தொடக்க ஜோடியுடன் பெர்த் டெஸ்டில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்ற ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை யார் திறப்பார்கள் என்பதை இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி தீர்மானிக்கும்.

கே.எல்.ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இந்த தொடக்க இடத்திற்கு பெரும் போட்டியாளர்களாக இருப்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய கே.எல்.ராகுல் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதன் காரணமாக, கே.எல்.ராகுலின் மோசமான பார்ம் தொடர்வதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெஞ்சில் அமர வைக்கப்படலாம்.

200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன இந்திய ஏ அணி:

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ அணி சார்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் மட்டும் 80 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், நிதிஷ் ரெட்டி 16 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய ஏ அணியில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளும், பியூ வெப்ஸ்டெர் 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

ALSO READ: ICC Test Rankings: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் கடும் வீழ்ச்சி.. மீண்டு வருவாரா விராட் கோலி..?

ஆஸ்திரேலியா ஏ பிளேயிங் 11 அணி:

மார்கஸ் ஹாரிஸ், சாம் கான்ஸ்டாஸ், கேமரூன் பான்கிராஃப்ட், நாதன் மெக்ஸ்வீனி (கேப்டன்), பியூ வெப்ஸ்டர், ஆலிவர் டேவிஸ், ஜிம்மி பியர்சன் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசர், நாதன் மெக்ஆண்ட்ரூ, ஸ்காட் போலண்ட், கோரி ரோச்சியோலி.

இந்தியா ஏ பிளேயிங் 11 அணி:

அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்ஷன், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, தனுஷ் கோட்யன், கலீல் அகமது, பிரஷித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.

Latest News