Chess Olympiad 2024: ஒரே நாளில் மூன்று தங்கம்.. செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை அள்ளிய இந்தியா!
Chess Olympiad: ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியில் குகேஷ், விளாடிமிர் ஃபெடோசீவை தோற்கடித்தார். அதேநேரத்தில், அர்ஜுன் எரிகைசி, ஜாம் சுபேலை தோற்கடித்தார். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தது. அன்றைய நாளில் இந்தியா 19 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், இந்திய மகளிர் அணியும் தங்கம் பதக்கம் வென்று வரலாறு படைத்தன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வெல்வது இது முதல் முறையாகும். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக 97 ஆண்டுகளில் இதுவரை செய்யமுடியாத சாதனையை இந்தியா செய்துள்ளது. முன்னதாக, இந்திய ஆடவர் அணி கடந்த 2014 மற்றும் 2022ம் ஆண்டு செஸ் ஒலிம்பியார் போட்டிகளில் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தது. அதேபோல், கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட் 2024:
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 195 நாடுகளை சேர்ந்த 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 நாடுகளை சேர்ந்த 183 அணிகளும் பங்கேற்றன.
🇮🇳 India wins the 45th FIDE #ChessOlympiad! 🏆 ♟️
Congratulations to Gukesh D, Praggnanandhaa R, Arjun Erigaisi, Vidit Gujrathi, Pentala Harikrishna and Srinath Narayanan (Captain)! 👏 👏
Gukesh D beats Vladimir Fedoseev, and Arjun Erigaisi prevails against Jan Subelj; India… pic.twitter.com/jOGrjwsyJc
— International Chess Federation (@FIDE_chess) September 22, 2024
இந்திய ஆடவர் அணியில் குகேஷ், பிரக்னானந்த், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பந்தலா ஹரிகிருஷ்ணா மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் (கேப்டன்) ஆகியோர் இடம் பெற்றனர். அதேநேரத்தில், பெண்கள் பிரிவில் ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ரமேஷ்பாபு, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் மற்றும் அப்ஜித் குண்டே (கேப்டன்) ஆகியோர் இடம் பெற்றனர்.
ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணியில் குகேஷ், விளாடிமிர் ஃபெடோசீவை தோற்கடித்தார். அதேநேரத்தில், அர்ஜுன் எரிகைசி, ஜாம் சுபேலை தோற்கடித்தார். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தது. அன்றைய நாளில் இந்தியா 19 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. நேற்று, இந்திய ஆடவர் பிரிவில் தங்கம் வெல்ல இந்தியா தனது 11வது மற்றும் கடைசி சுற்று போட்டியில் டிரா செய்தால் போதுமானதாக இருந்தது. இருப்பினும், இந்த போட்டியில் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், அர்ஜுன் மற்றும் பிரக்னானந்த் ஆகியோர் அந்தந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு 3-0 என்ற கணக்கில் தங்கத்தை வென்று கொடுத்தனர். இந்தியா தான் விளையாடிய அதாவது 11 சுற்றுகளிலும் 22க்கு 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய மகளிர் அணி:
🇮🇳India wins the 45th FIDE Women’s #ChessOlympiad! 🏆 ♟
Congratulations to Harika Dronavalli, Vaishali Rameshbabu, Divya Deshmukh, Vantika Agrawal, Tania Sachdev and Abhijit Kunte (Captain)! 👏 👏 pic.twitter.com/zsNde0tspo
— International Chess Federation (@FIDE_chess) September 22, 2024
மறுபுறம் பெண்கள் பிரிவி தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி, தானியா, திவ்யா, டி ஹரிகா மற்றும் வந்திகா அகர்வால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கடைசி சுற்று போட்டி முன்பு வரை இந்திய மகளிர் அணியும், கஜகஸ்தான் மகளிர் அணியின் கூட்டாக முதலிடத்தில் இருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய தரப்பில் ஹரிகா, திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் அந்தந்த போட்டிகளில் வெற்றி அஜர்பைஜானை வீழ்த்தி பட்டத்தை வென்று கொடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைஷாலியின் ஆட்டம் டிராவில் இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 3.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் இந்த சுற்றில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது.
குகேஷ் அசத்தல்:
மறுபுறம் தனிநபர் போட்டியில் குகேஷ் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம், இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 18 வயதான குகேஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற 2022 செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் குகேஷ் தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து கிரான் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு தங்க பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.