IND vs BAN: 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் பண்ட்.. வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

India Vs Bangladesh: ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீண்ட நாட்களாக பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாமல் போன விராட் கோலியும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஜடேஜா முதல்முறையாக இந்திய அணியில் களம் இறங்குகிறார். முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs BAN: 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் பண்ட்.. வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ரிஷப் பண்ட் (Image: rishabh pant/ twitter)

Published: 

09 Sep 2024 08:51 AM

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய இம்மாதம் சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது சென்னையில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதியும், கான்பூரில் 2வது போட்டி வருகின்ற 27ம் தேதியும் நடக்கிறது. இந்தநிலையில், இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்தது. மார்ச் 2024க்கு பிறகு இந்திய அணியின் முதல் சிவப்பு பந்து டெஸ்ட் தொடர் இதுவாகும். மறுபுறம், இந்த தொடர் புதிய இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முதல் சிவப்பு பந்து தொடராகவும் இருக்கும்.

ALSO READ: IPL 2025: ஐபிஎல் 2025ல் இம்பேக்ட் பிளேயர் விதி இல்லையா? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

2 ஆண்டுகளுக்கு பின் பண்ட்:

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பண்ட், 634 நாட்களுக்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிரான தொடருக்கான இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் 25 வரை மிர்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக ரிஷப் பண்ட் களமிறங்கினார். அதன்பின், டிசம்பர் 30ம் தேதி டெல்லிக்கு அருகே சாலை விபத்தில் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அதன்பின் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் சீசனில் களமிறங்கினார். அதில், சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். விக்கெட் கீப்பட் ரிஷப் பண்ட்டுடன், விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெலும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஜடேஜா – பும்ரா:

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீண்ட நாட்களாக பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாமல் போன விராட் கோலியும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஜடேஜா முதல்முறையாக இந்திய அணியில் களம் இறங்குகிறார். முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான சர்பராஸ் கான், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டார். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்காத நிலையில், இந்திய அணியில் முதன்முறையாக யஷ் தயாளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: Paralympic 2024: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி.. பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று புதிய சாதனை!

இந்தியாவும், வங்கதேச அணியும் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின். , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யஷ் தயாள்

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!