5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Olympic 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடித்த அமெரிக்கா.. இந்தியாவுக்கு எந்த இடம்?

Medal List | கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, இன்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவது உள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்தனர்.

Olympic 2024 : பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடித்த அமெரிக்கா.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஒலிம்பிக் 2024
vinalin
Vinalin Sweety | Published: 11 Aug 2024 23:20 PM

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 : இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடந்து முடிந்தது.  கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, இன்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவது உள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்தனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்காத நிலையில், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் இடத்தை பிடித்த அமெரிக்கா

ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பதக்கங்களின் அடிப்படையில் நாடுகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.

  1.  40 தங்க பதக்கங்கள், 44 வெள்ளி பதக்கங்கள், 42 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
  2. 40 தங்க பதக்கங்கள், 27 வெள்ளி பதக்கங்கள், 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 91 பதக்கங்களை பெற்று சீனா 2வது இடம் பிடித்துள்ளது.
  3. மொத்தம் 41 பதக்கங்கள் பெற்று ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு 71வது இடம்

அந்த வகையில் 6 பதக்கங்களை பெற்று இந்தியா 71வது இடத்தில் உள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 48வது இடம் பிடித்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 71வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Paris Olympics 2024: துப்பாக்கி சுடுதல் முதல் மல்யுத்தம் வரை… 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவின் சாதனை பயணம்!

பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

நீரஜ் சோப்ரா- ஈட்டி எறிதல் :

கடந்த டோக்கியோ 2020ல் இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, தற்போது நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று கொடுத்தார். இந்த ஒலிம்பிக்கில் இவர் தங்கப்பதக்கம் வெல்வார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு 5வது பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் – மனு பாக்கர்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் இந்தியா தனது முதல் பதக்கம் (வெண்கலம்) பெற்றது. இந்த பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்தவர் மனு பாக்கர்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி- மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங்:

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் இடம் பிடித்திருந்த மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் பதக்கத்தை வென்று கொடுத்தனர். 25 மீட்டர் பெண்கள் பிஸ்டல் போட்டியில் மனு நான்காவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார். இதில், மனு பாக்கர் வெற்றி பெற்றிருந்தால் மனு பாக்கர் தனது மூன்றாவது பதக்கத்தை வென்றிருப்பார்.

ஸ்வப்னில் குசலே- 50மீ ரைபிள் 3பி

துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் (வெண்கலம்) கிடைத்தது. 50 மீட்டர் ரைபிள் 3பி போட்டியில் ஸ்வப்னில் குசலே மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்தார். இதன்மூலம், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்வப்னில் குசலே படைத்தார்.

இதையும் படிங்க : Bangladesh Protest : தீவிரமடைந்த வங்கதேச வன்முறை.. அடித்து கொலை செய்யப்பட்ட நடிகர்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்திய ஹாக்கி அணி – வெண்கலம்:

அரையிறுதியில் தோல்வியை சந்தித்த இந்திய ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இதன்மூலம், மூன்றாவது இடத்தை பிடித்த இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை பெற்று தந்தது.

அமன் செஹ்ராவத்:

ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் 21 வயதே ஆன இந்திய வீரர் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்தியாவிற்கு ஆறாவது பதக்கம் கிடைத்தது.

Latest News