IND vs AUS: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்.. சொதப்பிய பேட்டிங்.. கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்!
IND Vs AUS 1st Test: முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 3வதாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 4வது இடத்தில் பேட்டிங் செய்த வந்த விராட் கோலியும் நீண்ட நேரம் விளையாடமல் 5 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பெர்த் டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்த 17 விக்கெட்டுகளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ஹர்சித் ராணா 4 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
ஆஸ்திரேலியா சொதப்பல்:
இந்திய அணி 150 ரன்களுக்குள் சுருண்டபோது, இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியதாக தோன்றியது. ஆனால், பவுலிங் போட வந்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் போட்டியை தலைகீழாக மாற்றினர். ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜாவுடன் தொடக்கம் தர வந்தார். இந்தியா ஏ அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மெக்ஸ்வீனி, இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாதன் மெக்ஸ்வீனி 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் உதவியுடன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், நான்காவது இடத்தில் பேட் செய்ய வந்த ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டிலும் வெளியேறினர். இவர்களது விக்கெட்கள் அனைத்தையும் ஜஸ்பிரித் பும்ராவே அவுட் செய்தனர்.
19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு, ஆஸ்திரேலிய ரசிகர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் லாபுஷேனிடம் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை எதிர்பார்த்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, தனது முதல் டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட்டை அவுட் செய்தார். தொடர்ந்து, முகமது சிராஜ் மிட்செல் மார்ஷை 6 ரன்களிலும், மார்னஸ் லாபுஷேன் 2 ரன்களிலும் பெவிலியனுக்கு அனுப்பினார்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. விக்கெட் கீப்பட் அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
That’s Stumps on what was an engrossing Day 1 of the 1st #AUSvIND Test!
7⃣ wickets in the Final Session for #TeamIndia! 👌👌
4⃣ wickets for Captain Jasprit Bumrah
2⃣ wickets for Mohammed Siraj
1⃣ wicket for debutant Harshit RanaScorecard ▶️ https://t.co/gTqS3UPruo pic.twitter.com/1Mbb6F6B2c
— BCCI (@BCCI) November 22, 2024
இந்திய அணியில் யார் அதிக ரன்கள்..?
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 3வதாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 4வது இடத்தில் பேட்டிங் செய்த வந்த விராட் கோலியும் நீண்ட நேரம் விளையாடாமல் 5 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
ALSO READ: IPL 2025 Schedule: மார்ச் 14 முதல் ஐபிஎல் ஆரம்பம்.. இறுதிப் போட்டி எப்போது..? வெளியான அட்டவணை!
ரோஹித் சர்மா இல்லாத நிலையில் தொடக்க ஆட்டக்காரராக உள்ளே வந்த கே.எல்.ராகுல் 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் துருவ் ஜூரல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் வெளியேறினர். 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் சரிந்த பிறகு, ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஏழாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 78 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விக்கெட்டுகள் தொடந்து விழ, அடிக்க ஆட முயற்சித்த நிதிஷ் குமார் ரெட்டி 59 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியிடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.