IND vs AUS: சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அவுட்டான கே.எல்.ராகுல்.. சமூக வலைதளங்களில் பொங்கும் ரசிகர்கள்..!
KL Rahul Controversial Out: பெர்த் டெஸ்ட் போட்டியில் உள்ள மூன்றாவது நடுவர் 2 கோணத்தில் கே.எல்.ராகுல் ஆடிய விதத்தை பார்த்து டக்கென அவுட் என அறிவித்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோக்களில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே உள்ள இடைவெளி தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுமுதல் தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கே.எல்.ராகுல் அவுட் ஆன விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது நடுவர் வழங்கியது தவறான தீர்ப்பு என்று சோசியல் மீடியாக்களில் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூன்றாம் நடுவரின் சர்க்கரைக்குரிய முடிவால் இந்திய அணி முதல் செஷனிலேயே முக்கியமான விக்கெட்டை இழந்தது. இதன் காரணமாக, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
ALSO READ: IPL 2025 Schedule: மார்ச் 14 முதல் ஐபிஎல் ஆரம்பம்.. இறுதிப் போட்டி எப்போது..? வெளியான அட்டவணை!
என்ன நடந்தது..?
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் செஷனை தொடங்கியத்தில் இருந்து தடுமாற்றுடன் விளையாடியது. 32 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை மிக கவனத்துடன் ஆடிய கே.எல். ராகுல் பந்தை தடுக்க முயற்சித்தார். ஆனால், பந்து கே.எல். ராகுலின் பேட் அருகே சென்று விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கைகளுக்கு சென்றது. அப்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் ராகுலின் விக்கெட்டுக்காக களத்தில் இருந்த நடுவர்களிடம் அவுட் என முறையிட்டனர்.
It’s hard to digest that KL Rahul has been wrongly given out. 😞💔
Like this tweet if you think KL Rahul was not out.
#INDvsAUS #INDvAUS#KLRahul #BorderGavaskarTrophy— FatBatman (@iam_FatBatman) November 22, 2024
ஆனால், கள நடுவர் நாட் அவுட் என கூறினார். இதனால், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ரிவியூக்கு சென்றார். அந்த நேரத்தில், ஆஸ்திரேலியாவின் முறையீட்டை பரிசீலனை செய்த மூன்றாவது நடுவர், பந்து கிரிக்கெட் பேட்டில் பட்டதா அல்லது காலில் அணிந்திருக்கும் பேடில் பட்டதா என்பதை தெளிவுபடுத்தாமல் ராகுலை அவுட் என்று தீர்ப்பளித்தார். அதனால் கள நடுவர் கூட தனது முடிவை மாற்றி ராகுலை அவுட்டாக அறிவித்தனர்.
குறைந்த நேரத்திற்க்குள் தீர்ப்பு:
இது மாதிரியான சர்ச்சைக்குரிய விக்கெட்டுகளை மூன்றாவது நடுவர்கள் மிக பொறுமையாக பார்த்து கண்டறிவார்கள் ஆனால், பெர்த் டெஸ்ட் போட்டியில் உள்ள மூன்றாவது நடுவர் 2 கோணத்தில் கே.எல்.ராகுல் ஆடிய விதத்தை பார்த்து டக்கென அவுட் என அறிவித்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோக்களில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே உள்ள இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஸ்னிகோமீட்டரில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தைக் கண்ட மூன்றாவது நடுவர் ராகுலை அவுட் என அறிவித்தார். பொதுவாக, ஒரு வீரர் அவுட்டானா என்பது குறித்து தெளிவான முடிவை எடுக்க முடியாதபோது, மூன்றாவது நடுவரான பீல்ட் அம்பயர் கொடுத்த முடிவை உறுதி செய்ய வேண்டும். ஆனால் ராகுல் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. முடிவு தெளிவாக இல்லை என்றாலும், மூன்றாவது நடுவர் கே.எல்.ராகுலை அவுட் என்று அறிவித்தார்.
A decision that got everyone talking! 😳
OUT or NOT OUT? What’s your take on #KLRahul‘s dismissal? 👀
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/r4osnDOLyG
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
ALSO READ: Argentina Team: விரைவில் கேரளாவில் விளையாட வரும் அர்ஜென்டினா.. களமிறங்குவாரா மெஸ்ஸி..?
டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை கடந்த கே.எல்.ராகுல்:
மிக சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கே.எல்.ராகுல், அவுட் என அறிவித்ததும் கோபத்துடன் வெளியேறினார். அவுட்டாவதற்கு முன், கே.எல்.ராகுல் தனது இன்னிங்ஸில் 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் உதவியுடன் 26 ரன்களுடன் அவுட்டானார். இந்த முடிவு போட்டியின் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த முடிவு இந்திய அணிக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், கேஎல் ராகுல் மீண்டும் அடுத்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். கே.எல்.ராகுல் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சராசரியுடன் 8 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்தார்.