India vs Australia PM’s XI: ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியுடன் மோதும் இந்திய அணி.. போட்டியை எங்கே பார்க்கலாம்?

Border Gavaskar Trophy: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி மேலும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது.

India vs Australia PMs XI: ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியுடன் மோதும் இந்திய அணி.. போட்டியை எங்கே பார்க்கலாம்?

இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் அணி (Image: BCCI)

Published: 

29 Nov 2024 15:10 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்திய அணி பெற்ற இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலை தந்தது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 500 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ALSO READ: South Africa vs Sri Lanka: 83 பந்துகளில் முடிந்த இலங்கை இன்னிங்ஸ்.. 42 ரன்களுக்குள் ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்கா அபாரம்!

2வது டெஸ்ட் போட்டி எப்போது..?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது பிங்க் பந்தில் பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி மேலும் ஒரு போட்டியில் விளையாட உள்ளது.

அதாவது, இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் கான்பெராவில் நடைபெறவுள்ளதுடன், பிங்க் பந்தில் விளையாடப்பட இருக்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் விளையாட இருக்கிறார்.

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இரண்டாவதாக குழந்தையாக மகன் பிறந்ததால் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்-11 இடையிலான போட்டி எப்போது நடைபெறும்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் 11 இடையிலான போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்-11 போட்டி எப்போது தொடங்கும்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் 11 இடையிலான போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

போட்டியை எங்கே காணலாம்..?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் 11 இடையிலான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் சேனல்களில் நேரடியாக காணலாம்.

ALSO READ: IND vs AUS 2nd Test: 5 வீரர்களுக்கு இது முதல் பிங்க் பால் டெஸ்ட்.. கலக்க காத்திருக்கும் இளம் வீரர்கள்!

எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்..?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் 11 இடையிலான போட்டியின் நேரடி ஒளிபரப்பை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

விளையாடும் அணி விவரம்:

ஆஸ்திரேலிய பிரதமர் 11:

ஜாக் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சார்லி ஆண்டர்சன், மஹ்லி பியர்ட்மேன், ஸ்காட் போலண்ட், ஜாக் கிளேட்டன், ஐடன் ஓ’கானர், ஒல்லி டேவிஸ், ஜேடன் குட்வின், சாம் ஹார்பர், ஹன்னோ ஜேக்கப்ஸ், சாம் கான்ஸ்டாஸ், லாயிட் போப், மேத்யூ ரென்ஷா, ஜெம் ரியான்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மொஹம்மது ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர். இருப்பு: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது, யாஷ் தயாள்.

குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!
உங்கள் அன்பை அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
மழைக்காலத்தில் ஜில் தண்ணீர் குடிக்கலாமா?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க டிப்ஸ்