5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 1st T20 Match Preview: இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி.. இன்று மழையால் போட்டி பாதிப்பா..?

IND vs BAN: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. அதேபோல், இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் 22ம் தேதி நார்த் சவுண்டில் டி20 உலகக் கோப்பையில் மோதின. இதையடுத்து, கடந்த 15 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே 14 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், வங்கதேச அணியால் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

IND vs BAN 1st T20 Match Preview: இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி.. இன்று மழையால் போட்டி பாதிப்பா..?
இந்தியா – வங்கதேசம் (Image: PTI and twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 06 Oct 2024 10:43 AM

நஸ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தநிலையில், அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் டி20 அணி வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 இன்றுமுதல் விளையாட உள்ளது.

இந்தியா – வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டி20 போட்டி எப்போது எங்கு நடைபெறுகிறது, இதுவரை இரு அணிகளும் எத்தனை முறை நேருக்குநேர் மோதியுள்ளது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IND vs PAK Preview: சூடுபிடிக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா.. யாருக்கு வெற்றி?

போட்டி எங்கு நடைபெறுகிறது..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி குவாலியரில் உள்ள ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், வங்கதேச அணிக்கு சாண்டோவும் தலைமை தாங்குகின்றனர்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டியை ஸ்போர்ட்ஸ் 18ல் டிவியில் பார்க்கலாம். அதேபோல், ஜியோ சினிமா அதன் ஆப் மற்றும் இணையதளம் இரண்டிலும் இந்தியா மற்றும் வங்கதேசம் T20 போட்டியை கண்டுகளிக்கலாம்.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. அதேபோல், இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் 22ம் தேதி நார்த் சவுண்டில் டி20 உலகக் கோப்பையில் மோதின. இதையடுத்து, கடந்த 15 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே 14 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், வங்கதேச அணியால் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த போட்டி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தினால் டபுள் ஹாட்ரிக் அதாவது 6வது வெற்றியை பதிவு செய்யும்.

மழைக்கு வாய்ப்பா..?

இந்தியா – வங்கதேச இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறும் குவாலியரில் மழை பெய்ய வாய்ப்பிக்கை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று குவாலியரில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 24 டிகிரியாகவும், ஈரப்பதம் 80% ஆகவும் இருக்கும். மழை இல்லாத காரணத்தினால் முழு போட்டியையும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பிட்ச் எப்படி..?

மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்தில் இதுவரை எந்த டி20 போட்டியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவும் எதிராக கடைசியாக நடந்த இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

டி-20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

டி-20 தொடருக்கான வங்காளதேச அணி:

நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சீத் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், தௌஹீத் ஹ்ரிதயோய், மஹ்மூத் உல்லா, லிட்டன் தாஸ், ஜெகர் அலி அனிக், மெஹ்தி ஹசன் மிராஜ், ஷக் மஹேதி ஹசன், ரஸ்த் ஹொசான் , தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சீம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

 

Latest News