5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs BAN 1st test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்..?

India vs Bangladesh 1st test Cricket Match Live Streaming: இலங்கை தொடருக்கு பிறகு நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ளதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது நடைபெறுகிறது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

IND vs BAN 1st test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்..?
இந்தியா – வங்கதேசம் (Image: twitter)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 18 Sep 2024 21:18 PM

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (செப்டம்பர் 19) முதல் தொடங்குகிறது. வங்கதேச அணிக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 19 ம் தேதியான நாளை முதல் வருகின்ற 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கை தொடருக்கு பிறகு நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ளதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எங்கு, எப்போது நடைபெறுகிறது..? இந்த போட்டியை எந்த சேனல் மற்றும் எந்த ஆப்பில் முழுமையாக பார்க்கலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி எங்கு, எத்தனை நாட்கள் நடைபெறுகிறது..?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 (நாளை) முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. 2021க்குப் பிறகு சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி எப்போது தொடங்கும்..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 முதல் போட்டி முடிவடையும் கடைசி நாளான செப்டம்பர் 23ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி எந்த ஒடிடி தளத்தில் லைவ்வாக பார்க்கலாம்..?

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியை ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

இந்தியாவில் உள்ள எந்த டிவி சேனனில் இந்த டெஸ்ட் போட்டியை பார்க்கலாம்..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை நீங்கள் டிவியில் காண வேண்டும் என்றால் ஸ்போர்ட்ஸ் 18-1 SD, ஸ்போர்ட்ஸ் 18-1 HD மற்றும் ஸ்போர்ட்ஸ் 18-2 (இந்தி) ஆகிய டிவி சேனல்களில் நேரடியாக காணலாம்.

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை வங்கதேச நாட்டில் எந்த டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்?

இந்தியா vs வங்கதேசம் 1வது டெஸ்ட் போட்டியை GTV பங்களாதேஷில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக வங்கதேச அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றது கிடையாது.

ALSO READ: IND vs BAN: “இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்”- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் விவரம்:

இந்தியா:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

வங்கதேசம்:

நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹ்தி ஹசன் மிராஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, தஸ்கின் மஹ்மூத், தாஸ்கின் மஹ்மூத், , சையத் காலித் அகமது மற்றும் ஜாகிர் அலி அனிக்.

Latest News