IND vs BAN 1st Test: ரிஷப் பண்ட், கில் அதிரடி சதம்.. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..!
India Vs Bangladesh: இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில், விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, கில் மற்றும் பண்ட் ஆகியோர் நிதானத்துடன் ஆடி, கிடைத்த பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு விரட்டினர்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திற்கு 515 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன்போது சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அதிரடியான சதம் அடித்தார். கடைசி வரை சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 119 ரன்கள் எடுத்திருந்தார். அதேநேரத்தில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் அனுபவ பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த போட்டியில் சொற்ப எண்களில் ஆட்டமிழந்தனர்.
Skilful Gill rose to the occasion with a superb TON 👏👏
📽️ Relive his 5th Test Hundred 🔽#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) September 21, 2024
கில் – பண்ட் பார்ட்னர்ஷிப்:
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில், விராட் கோலி 17 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, கில் மற்றும் பண்ட் ஆகியோர் நிதானத்துடன் ஆடி, கிடைத்த பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு விரட்டினர். இதனுடன் இருவருக்கும் இடையே செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைந்தது.
ALSO READ: Virat Kohli: சாதனையுடன் மோசமான ரெக்கார்டையும் படைத்த கோலி.. குவியும் வாழ்த்துகளும், ஆதரவுகளும்..
A CENTURY on his return to Test cricket.
What a knock this by @RishabhPant17 👏👏
Brings up his 6th Test ton!
Live – https://t.co/jV4wK7BgV2…… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/A7NhWAjY3Z
— BCCI (@BCCI) September 21, 2024
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் 128 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் கில் 176 பந்துகளில் 119 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் எடுத்திருந்தார்.
விக்கெட் எடுக்காமல் திணறிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்:
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச பந்துவீச்சாளர்களால் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹ்தி ஹசன் மிராஜ் 2 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது, நஹித் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர்.
கில் சாதனை:
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சதம் அடித்த சுப்மன் கில் தனது பெயரில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, 2024ம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்லார். சுப்மன் கில் இந்த ஆண்டு மட்டும் 3 சதங்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தலா 2 இரண்டு சதங்களை அடித்துள்ளன.
இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்திருந்தது. இருப்பினும், முதல் இன்னிங்ஸில் கில் சிறப்பாக எதையும் செய்யவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூஜ்ஞியத்தில் அவுட்டானார். ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார்.
ஒரே நாளில் அதிக விக்கெட்கள்:
சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டெஸ்டின் இரண்டாவது நாளான நேற்று இந்தியா – வங்கதேசத்தை சேர்ந்த இரு அணிகளைச் சேர்ந்த 17 பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர், இதுவும் ஒரு சாதனையாக பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதேசமயம் இந்த டெஸ்டின் இரண்டாவது நாளில் 15 பேட்ஸ்மேன்கள் பெவிலியன் சென்றனர். இதுவரை இதுவே டெஸ்ட் வரலாற்றில் சேப்பாக்கத்தில் ஒரே நாளில் விழுந்த அதிக விக்கெட்களாக இருந்தது. தற்போது, இந்தியா – வங்கதேச முதல் டெஸ்ட் போட்டி முறியடித்துள்ளது. அதே நேரத்தில், 1979-ல் சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் மொத்தம் 15 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இன்று சேப்பாக்கத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக அவுட்டான பேட்ஸ்மேன்கள் சாதனை படைத்துள்ளனர்.