Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்த அஸ்வின்.. அணிவகுத்த பல்வேறு சாதனைகள்!
India Vs Bangladesh: முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து, இந்திய அணியை மீட்டெடுத்தார். அதேசமயம் வங்கதேசத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்களை அள்ளினார். ஒரு டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் மற்றும் சதம் அடிப்பது இது நான்காவது முறையாகும். இதன்மூலம், ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 5 விக்கெட்களை அதிக முறை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் முதலிடத்தில் உள்ளார்.
சென்னை நடந்த இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் சுழற்பந்து ஜாம்பவான் 21 ஓவர்கள் வீசி 88 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை அள்ளினார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய அதிக வயதான பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். மேலும், சென்னை டெஸ்டின் நாயகனாக மாறிய அஸ்வின், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 10வது முறையாக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அஸ்வின் சாதனை:
முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து, இந்திய அணியை மீட்டெடுத்தார். அதேசமயம் வங்கதேசத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்களை அள்ளினார். ஒரு டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் மற்றும் சதம் அடிப்பது இது நான்காவது முறையாகும். இதன்மூலம், ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 5 விக்கெட்களை அதிக முறை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம் முதலிடத்தில் உள்ளார்.
Century and five-wicket haul for India in a Test match:
Vinoo Mankad (1952)
Polly Umrigar (1962)
Ravichandran Ashwin (2011, 2016, 2021, 2024)
Ravindra Jadeja (2022, 2024)📸: BCCI#INDvBAN pic.twitter.com/TKFunVLutR
— CricTracker (@Cricketracker) September 22, 2024
இயான் போத்தம் இந்த சாதனையை தனது டெஸ்ட் வாழ்க்கையில் 5 முறை பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், பாகிஸ்தானின் முஷ்டாக் முகமது, தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் மற்றும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு முறை இந்த சாதனைகளை படைத்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்:
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 522 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்காக அதிக வீழ்த்திய பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் பட்டியலில் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வின் இதுவரை 37 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக 5 விக்கெட் வீழ்த்தியவர்
- 67 முறை – முத்தையா முரளிதரன் (133 டெஸ்ட்)
- 37 முறை – ரவிச்சந்திரன் அஸ்வின் (101 டெஸ்ட்) *
- 37 முறை – ஷேன் வார்ன் (145 டெஸ்ட்)
- 36 முறை – ரிச்சர்ட் ஹாட்லீ (86 டெஸ்ட்)
- 35 முறை – அனில் கும்ப்ளே (132 டெஸ்ட்)
- உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும்தான்.
- ஒரு டெஸ்ட் போட்டியில் 30 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, 20 முறை 50 ப்ளஸ் ரன்கள் குவித்த ஒரே வீரர் அஸ்வின் மட்டும்தான்.
ஒரே டெஸ்டில் அதிக முறை ஒரு சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் (இந்தியாவுக்காக டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்)
- வினு மன்கட்- 1952, இங்கிலாந்துக்கு எதிராக 184 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- பாலி உம்ரிகர் – 1962, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 172 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 2011, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, 103 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 2016, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 113 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 2021, இங்கிலாந்துக்கு எதிராக 106 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவீந்திர ஜடேஜா- 2022, இலங்கைக்கு எதிராக 175 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவீந்திர ஜடேஜா – 2024, இங்கிலாந்துக்கு எதிராக 112 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்- 2024- வங்கதேசத்திற்கு எதிராக 113 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ALSO READ: Watch Video: ’இங்க ஆளு இல்லை நிப்பாட்டுங்க’- வங்கதேசத்திற்கு பீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட்..!
ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்:
- இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை கும்ப்ளேவுடன் சமன் செய்துள்ளார் அஸ்வின். அஸ்வினும், கும்ப்ளேவும் தங்களது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை 8 முறை வீழ்த்தியுள்ளனர்.