5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

India vs Bangladesh 2nd T20: இந்தியா-வங்கதேச 2வது டி20யில் மழை பெய்ய வாய்ப்பா? டெல்லி வானிலை எப்படி?

IND Vs BAN: கடந்த அக்டோபர் 6-ம் தேதி குவாலியரில் நடைபெற்ற போட்டியுடன் இந்தியா-வங்கதேசம் இடையேயான டி20 தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை 127 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் மயங்க் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

India vs Bangladesh 2nd T20: இந்தியா-வங்கதேச 2வது டி20யில் மழை பெய்ய வாய்ப்பா? டெல்லி வானிலை எப்படி?
இந்தியா – வங்கதேசம் (Image: PTI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 09 Oct 2024 11:03 AM

இந்திய கிரிக்கெட் அணிக்கும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கும் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. அந்தவகையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சி செய்யும். இத்தகைய சூழ்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது..? போட்டியில் மழை வருமா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாதா..? அப்போ! போட்டிகள் எங்கு நடைபெறும்?

பிட்ச் ரிப்போர்ட்:

இந்திய கிரிக்கெட் அணிக்கும், வங்கதேச கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பிட்ஸ் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பிட்சாக இருக்கும். அந்தவகையில், இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக கருத்தப்படுகிறது. சிறிய ஸ்டேடியம் என்பதால் இங்கு சிக்ஸர்களையும், பவுண்டரிகளை அதிகளவில் பார்க்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரசிகர்கள் இன்று அதிக ஸ்கோரிங் போர்டை எதிர்பார்க்கலாம்.

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 164 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 155 ரன்களும் ஆகும். அதேபோல், இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்களும், குறைந்தபட்ச ஸ்கோராக 120 ரன்களும் பதிவாகியுள்ளது.

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டிக்கு நடுவே மழையா..?

வானிலை முன்னறிவிப்பு இணையதளமான AccuWeather இன் படி, அக்டோபர் 9 ஆம் தேதியான இன்று வானம் முற்றிலும் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை பகலில் 35 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் மற்றும் இரவில் 24 டிகிரி வரை குறையும். மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், பனி பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, போட்டிக்கு நடுவே மழையால் ரசிகர்களுக்கு இந்தவொரு இடையூறும் ஏற்படாது.

ALSO READ: ICC Women’s T20 World Cup: தத்தளிக்கும் ஹர்மன்ப்ரீத் படை.. இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இதுவரை மொத்தம் 15 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், அதிகபட்சமாக 14 முறை இந்திய அணியும், வங்கதேசம் ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், வங்கதேசத்துக்கு எதிராக தொடர்ந்து 6 முறை டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-வங்கதேச இடையிலான 2வது டி20 போட்டி இந்தியாவில் Sports18 நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட இருக்கிறது. அதேபோல், JioCinema ஆப்பில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

இந்திய அணி முன்னிலை:

கடந்த அக்டோபர் 6-ம் தேதி குவாலியரில் நடைபெற்ற போட்டியுடன் இந்தியா-வங்கதேசம் இடையேயான டி20 தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை 127 ரன்களுக்கு சுருட்டியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் மயங்க் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்த இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் 39 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியா vs வங்கதேசம் 2வது டி20 போட்டியில் கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப்/தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

 

Latest News