IND vs BAN 2nd test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்த போட்டி எப்போது, எங்கு தொடங்குகிறது..?

IND vs BAN 2nd Test: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அஸ்வினின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நாளை தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று வங்கதேசத்தை கிளீன் ஸ்வீப் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது.

IND vs BAN 2nd test Live Streaming: இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்த போட்டி எப்போது, எங்கு தொடங்குகிறது..?

இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்

Published: 

26 Sep 2024 10:57 AM

இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி (நாளை) முதல் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அஸ்வினின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று வங்கதேசத்தை கிளீன் ஸ்வீப் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது. இந்தநிலையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி எப்போது? எங்கே போகிறது? போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் இங்கே.

ALSO READ: IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு தொடங்குகிறது..?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 17ம் தேதியான நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

எத்தனை மணிக்கு போட்டி தொடங்கும்..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அதாவது காலை 9 மணிக்கு டாஸ் போடப்படும்.

எந்த ஓடிடியில் இலவசமாக பார்க்கலாம்..?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியை ஜியோ சினிமா ஆப் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை எந்த சேனலில் காணலாம்..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18-1எஸ்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 எச்டி, ஸ்போர்ட்ஸ் 18-2 இந்தி சேனல்களில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

மழையால் இந்திய அணிக்கு சிக்கல்..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், போட்டி தொடங்கும் தேதியான நாளை (செப்டம்பர் 27ம் தேதி) 93 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அக்யூவெதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தவிர, போட்டியில் 28, 29 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பின்னடைவை சந்திக்க நேரிடும்.

போட்டி சமநிலையில் இருந்தால், இரு அணிகளுக்கும் இடையே 4-4 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். தற்போது இந்திய அணி 71.67 சதவீத மதிப்பெண்களுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மறுபுறம், வங்கதேச அணி 39.29 சதவீத புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

ALSO READ: MS Dhoni: சம்பளம் பாதியாக குறைப்பு.. ஐபிஎல் 2025ல் தோனி வாங்கபோகும் சம்பளம் இவ்வளவுதானா..?

டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் விவரம்:

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

இந்திய டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி:

நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷத்மான் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி அனிக், தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஹசன் மஹ்மூத், தைஜுல் இஸ்லாம். ஹசன் ஜாய், நஹித் ராணா, காலித் அகமது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!